முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

 


தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.

-------------------------

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (09.07.2021) நடைபெற்றது. ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் நிறுவனர் திரு.மோகன் சி.லாசரஸ் அவர்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார். மருத்துவ உபகரணங்களை பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் மரு.நேரு அவர்களிடம் வழங்கினார். 

வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இ.சி.ஜி கருவி 2, மெட்டனல் மானிட்டர் 1, எக்ஸ்ரே மிசின் 1, எலைட் வியு பேசன்ட் மானிட்டர் 2, ஸ்டெச்சர் 4, வீல் சேர் 5 மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 650 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை படிபடியாக குறைந்து தற்போது தொற்றின் அளவு 20. 30 என குறைந்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பு காரணமாகத்தான் தொற்றின் அளவை விரைவில் குறைக்க முடிந்தது. இன்னும் முழுமையாக நாம் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்பதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பல்வேறு நாடுகளில்  நியுட்டன் வகை வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில்தான் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 2வது அலையின்போது மக்கள் பங்களிப்பு மட்டுமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் திரு.மோகன் சி.லாசரஸ் அவர்களும் ரூ.16 லட்சம் மதிப்பில் பல்வேறு உபகரணங்களை வழங்கி உள்ளார்கள். இன்றைய தினம் ரூ.10 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கி உள்ளார்கள். இதுபோன்று திருச்செந்தூர்  அரசு பொது மருத்துவமனைக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான கருவிகளை வழங்கி உள்ளார்கள். இது மருத்துவ சிகிச்சைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். தூத்துக்குடியில் உள்ள மைக்ரோபயலஜி ஆர்டிபிசிஆர் லேப் மூலம் 5 லட்சத்து 40 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா அதிக பரவலின்போது தினசரி 4 ஆயிரம் டெஸ்ட்கள் வரை பரிசோதனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகள் அனைத்தும் அரசு மருத்துவமனை மூலமே மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை கழுவ வேண்டும். பொது வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2.50 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அனைவரும் போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தடுப்பூசி வரவர தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. முதல் தவணை ஊசி போட்டவர்களுக்கு 2வது தவணை ஊசி அவர்கள் ஏற்கனவே போட்ட பகுதிக்கு சென்று போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மரு.குமரன், உறைவிட மருத்துவர் திரு.சைலேஸ் மற்றும் ஏசு விடுவிக்கின்றார் அமைப்பை சேர்ந்த டிரஸ்டி மரு.அன்புராஜன், செயலர் திரு.தாமஸ்ஜெயபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்