முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.50 இலட்சம் மதிப்பில் கொரோனா வார்டு மின் தூக்கி கட்டிட திறப்பு மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 




தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 இலட்சம் மதிப்பில் கொரோனா வார்டு பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட மின் தூக்கி கட்டிடத்தை, மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 668 பயனாளிகளுக்கு ரூ.1.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

-----------------------

           


                                                                                                                                           தூத்துக்குடி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 இலட்சம் மதிப்பில் கொரோனா வார்டு பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட மின் தூக்கி கட்டிட திறப்பு விழா மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், ஆகியோர் திறந்து வைத்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 668 பயனாளிகளுக்கு ரூ.1.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.                                                                  

                           

                                                             இவ்விழாவில், மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது:-

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஒராண்டிற்கு முன்பு கொரோனா காலக்கட்டத்தில்  ஆய்வு செய்த போது இங்கு லிப்ட் வசதி இன்றி நோயாளிகள் மிகவும் சிரமபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து லிப்ட் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக ரூ.50 இலட்சம் வழங்கப்பட்டது. அந்த பணிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் மிகவும் தாமதமாக நடந்து வந்தது. மக்களின் பயன்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டும் அதை பயன்படுத்தாத நிலையில் இருந்தது. தற்போது இந்த பணிகள் விரைவு படுத்தப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற போது வாக்களித்தவர்கள் மட்டுமின்றி வாக்காளிக்காதவர்களுக்கும் நான் முதல்வர் அவனைவருக்குமான திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்கள். தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முதல்வராக பொறுப்பேற்றவுடன் இந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது தளபதி அவர்கள் உறுதி அளித்தார்கள். தற்போது, அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 668 நபர்களுக்கு ரூ.1கோடியே 70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தேர்தலின் போது சொல்லப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள நிதி நெருக்கடியை தீர்க்க வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியும் விரைவில் தீர்க்கப்படும்.   தமிழகத்தில் கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக அனைவரும் மீண்டு வருவோம். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு விளங்கும் என பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், முக்கிய பிரமுகர்கள் திரு.ஆனந்த சேகரன், திரு.ஜெகன் பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.நேரு, மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.பாவலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் (பொ) திரு.செல்வநாயகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மின்பணி திரு.இரணியன், உதவி செயற்பொறியாளர்கள் திரு.வெள்ளசாமி ராஜ் (கட்டிடம்), திரு.ராமலிங்கம் (மின்பணி), சமூக நல அலுவலர் திருமதி.தனலெட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்மநாயகம், தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்