முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்து துவக்கம்

 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி புதிய வழித்தட பேருந்துகளை மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் 

------------------------------

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்து துவக்க நிகழ்ச்சி இன்று (10.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு 5 புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பெரியதாழை பேருந்து நிலையத்தில் இருந்து உடன்குடிக்கு நகர பேருந்தினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்செந்தூர் பகுதியை பல்வேறு மேம்பாடு அடைந்து சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து இன்று பேருந்து போக்குவரத்தில் புதிய வழித்தடங்களும் துவக்கி வைக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி, தாண்டவன்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, குட்டம் வழியாக உவரிக்கு ஒரு பேருந்து வசதியும், திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி, மணிநகர், தட்டார்மடம், திசையன்விளை வள்ளியூர் வழியாக நாகர்கோயிலுக்கு 2 பேருந்துகளும், திருச்செந்தூரில் இருந்து குலசை, உடன்குடி, பெரியதாழை, உவரி, கூடங்குளம், அஞ்சுகிராம் வழியாக கன்னியாகுமரிக்கு 2 பேருந்துகளும் புதிய வழித்தடத்தில் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.  

மேலும், பெரியதாழை மக்களின் கோரிக்கையை ஏற்று பெரியதாழையில் இருந்து அழகப்பபுரம், படுக்கப்பத்து, அழகம்மாள்புரம், தாண்டிபுரி, சுண்டன்கோட்டை, தங்கையூர் வழியாக உடன்குடிக்கு பெண்கள் இலவசமாக செல்லும் வகையில் நகரப்பேருந்தும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

       

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, தி.மு.க. மாநில மாணவர்; அணி துணைச் செயலாளர் திரு.உமரிசங்கர், திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குனர் திரு.ராஜேஷ்வரன், பொது மேலாளர் திரு.சரவணன், துணை மேலாளர்கள் திரு.சசிகுமார், திரு.கோபாலகிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.ராமஜெயம், எ.பி.ரமேஸ், திரு.வால்சுடலை, திரு.மாரியப்பன், திரு.ஜெயக்குமார், திரு.தினகர், திரு.முருகன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்