முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் திறப்பு :





தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஜ.பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மாண்புமிகு சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகில் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் மற்றும் இதர கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (11.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஜ.பெரியசாமி அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மாண்புமிகு சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இவ்விழாவில், 847 பயனாளிகளுக்கு ரூ.4.87 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது. மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் காய்கறி தொகுப்பு பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தன்னாhர்வளர்கள் 5 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இவ்விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஜ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் சாதரண விவசாயிகள் உறுப்பினர்கள் ஆக முடியாத நிலையை மாற்றி இன்று அனைவரும் உறுப்பினர் ஆகலாம் என்பதுடன் புதிய உறுப்பினர்களுக்கும் உடனடியாக கடனுதவிகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். இந்தியாவிலேயே முதன் முதலில் விவாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான். விவசாயிகளுக்கு பெரிய விவசாயி, சிறிய விவசாயி என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் இலவச மின்சாரத்தை வழங்கியதும் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் தான். சி.பா.ஆதித்தனார் அமைச்சராக இருந்த காலத்தில் தான் பெரும் செல்வந்தர்கள் உறுப்பினர்களாக இருந்த நிலையை மாற்றி அனைவரும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கடன் பெறும் நிலையை ஏற்படுத்தியவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் தான். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் கல்வி கடன், சுய உதவிக்குழுக் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். சொன்னதை செய்வதுடன், சொல்லாததையும் செய்யும் ஆட்சியாக கழக ஆட்சி உள்ளது. நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரத்துடன் 14 பொருட்களை இலவசமாக வழங்கியது நம் முதல்வர் அவர்கள் தான்.

மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் தான் மக்களின் சிரமத்தை போக்க பெரிய நியாயவிலைக் கடைகளை பிரித்து பகுதி நேர கடைகளை கொண்டு வந்தார்கள். தற்போது 500, 300  குடும்ப அட்டைகளுக்கு கூட பகுதி நேர நியாயவிலைக்கடைகள் துவங்கப்பட்டுள்ளது. அதைப்போல 30 நாட்களும் ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டதும் மாண்புமிகு டாக்கடர் கலைஞர் அவர்கள் தான். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்காக மக்களாட்சி நடத்தி வருகிறார். யாரும் எந்த கோரிக்கையும் எப்போது வேண்டுமானாலும் அது ஆன்லைன் மூலமாக இருந்தாலும் அவைகளை நிறைவேற்றி வருகிறார். 

தூத்துக்குடியில் அண்ணன் பெரியசாமி அவர்களின் காலத்தில் தான் மிளகாய் மற்றும் பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விதை, உரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி அவர்களின் உற்பத்தி செய்யும் பொருட்களை பெற்று நல்ல விலைக்கு விற்பனை செய்யும் நிலையையும் ஏற்படுத்தி கொடுத்தார்கள். தூத்துக்குடி கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு ரூ.150 கோடி கடன் வழங்கியதாக தெரிவித்தார்கள். இந்த ஆண்டு ரூ.200, ரூ.250 கோடி அளவிற்கும் கடன் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டிக் கடையைப் போல செயல்படாமல், சுய தொழில் செய்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் வகையிலான கடன்களை வழங்க வேண்டும். மொத்த கடன் உதவியில் நகை கடன்கள் 70 சதவீதம் உள்ளது. நகை இல்லாதவர்களும் கடன் பெறும் வகையில் சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடி கூட்டுறவு வங்கியில் பணம் இல்லாமலும், கூட்டுறவு சங்கங்களின் பணமில்லாமலும் ரூ.33 கோடி அளவிற்கு நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போல முறைகேடுகளை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயிர் கடன் 7 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. ஓராண்டிற்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தி விட்டால் அதற்கு வட்டி இல்லை எனும் திட்டத்தை மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கொண்;டு வந்த திட்டமாகும். கூட்டுறவு அமைப்புகள் பொது நிறுவனமாக இருந்தாலும் இது நமது அனைவருக்கும் சொந்தம் என்பதையும் நம் சொத்து என்பதையும் அறிந்து இதை வளர்த்திட மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து  மக்களுக்கு  எளிமையாக குடிமை பொருட்களை பெறும் வகையில் புதிய நியாயவிலைக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் இதுவரை 46 பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டுள்ளது. இது 47வது பெட்ரோல் பங்க் ஆகும். மேலும், 302 மருந்தகங்கள் இயங்கி வருகிறது. இங்கு தரமான மருந்துகள் 20 சதவீத தள்ளுபடியில் விற்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.162 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.9கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. விவசாய பொருட்களை இருப்பு வைத்து நல்ல விலைக்கு விற்கும் வகையில் தேவையான பகுதிகளில்  குளிர்பதன கிடங்குகள் கட்ட நடவடிக்கைகளை எடுகக்கப்படும். விவசாயிகளின் நலனுக்காக கூட்டுறவுத்துறையின் மூலம் தொடாந்து பல நல்ல திட்டங்கள் செல்படுத்தப்பட்டு வரும் என பேசினார். 

இவ்விழாவில், மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தலைவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் காலத்தில் தான் கூட்டுறவுத்துறையின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செய்யப்பட்டது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செல்பட மறு சீரமைப்பு பணிகளை செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு உரிய மரியாதையையும், உரிமைகளையும் நிலை நாட்டிட வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் விவசாயிகளுக்கு அதிக நலம் பயக்கும் வகையில் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள். விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கின்ற அரசாக தமிழக அரசு விளங்கும் என பேசினார்.

இவ்விழாவில், தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முனைவர்.கே.சி.ரவிச்சந்திரன்,  தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.சிவகாமி, முக்கிய பிரமுகர்கள் திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஆனந்த சேகரன், இந்திய ஆயில் கார்ப்ரேசன் மதுரை மண்டல சில்லறை விற்பனை தலைமை அலுவலர் திரு.மகேஷ், சில்லரை விற்பனை மேலாளர் திரு.செந்தில்குமார், தூத்துக்கு சரக துணைப் பதிவாளர் திரு.ரவிந்திரன், தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர்  திரு.அந்தோணி மற்றுமு; அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்