முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

 


    

  பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி மிரட்டல் விடுத்த சைபர் கிரைம் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது 


தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் உடையார்குளத்தைச் சேரந்தவர் முத்து மகன் பலவேசம் (43). இவர் கடந்த 28.05.2021 அன்று ஒரு பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பலவேசத்தை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி பலவேசம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன் அவர்கள்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார். 


மேற்படி காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

                                                                            அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் நாசரேத் உடையார்குளத்தைச் சேரந்த முத்து மகன் பலவேசம் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் அவர்கள் எதிரி பலவேசத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். 

                                                                                       100 பேர் குண்டர் சட்டத்தில் கைது                                                                                              இந்த ஆண்டு இதுவரை கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 74 பேர், போக்சோ வழக்குளில் சம்மந்தப்பட்டவர்கள் 13 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர், மணல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர், விபச்சார வழக்கில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளி ஒருவர் என மொத்தம் 100 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 

                                                                 தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்