தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் - வல்லநாடு மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் நேரில் ஆய்வு





தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் கோவில்பட்டி நகராட்சியில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்

---------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் கோவில்பட்டி நகராட்சியில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று இன்று (29.09.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதி வடமலைநாடு ராஜாகுளத்தினை தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். 130 ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளத்தினை தூர்வாறி அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகளை கொண்ட கமிட்டி அமைத்து தூர்வாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இங்கே எடுக்கப்படும் வண்டல்மண் அரசு விதிமுறையின்படி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும், கூடுதலாக உள்ள மண் கனிம வளத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்தார்.                      .                                                                                                                              

அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி தாலுகா அலுவலகம் அருகில் கோவில்பட்டி 2ம் குடிநீர் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை பார்வையிட்டார். அங்கு 2ம் திட்ட குடிநீர் விநியோக பணிகளுக்காக கட்டப்பட்டுள்ள 14 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா குறித்து ஆய்வு செய்தார். மேலும் புதிய குடிநீர் இணைப்பு வழங்க குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை விரைவுபடுத்தி 1 மாத காலத்திற்குள் முழுமையாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்கள், குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கயத்தாறு, கோவில்பட்டி பல்வேறு ஒன்றிய கிராம பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் 248 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் திட்ட பணிகளில் ஒரு சில பகுதிகளில் இணைக்க வேண்டிய இணைப்புகளை உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.10.50 கோடி மதிப்பிட்டில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் பிரசவ மற்றும் குழந்தை பராமரிப்பு கட்டிடத்தினை தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு டைல்ஸ் ஒட்டும் பணிகள் மற்றும் கட்டிட பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.    ...              .                             .                                                          

அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமுக பொறுப்பு நிதி ரூ.1 கோடியில் நிறுவப்பட்டு வரும் ஆக்சிசன் ஜெனரேட்டர் நிறுவும் பணிகளை பார்வையிட்டார்.                                                                                                     .  .        .            மேலும் அங்கு சமுக பொறுப்பு நிதியில் அமைக்கப்பட்டுள்ள 125 கோவி மின்னோக்கியை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான சிதம்பராபுரம் உரக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் பணிகளையும், செப்டிக் டேங்க் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு அதிக அளவு பழ மரக்கன்றுகளை நட்டு பராமரிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

ஆய்வின்போது கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர் செ.ராஜூ, கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் திரு.முத்து பழனியப்பன், செயற்பொறியாளர்கள் திரு.செந்தூர்பாண்டியன், திரு.விஸ்வலிங்கம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமதி.சசிரேகா, கருங்குளம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கோமதிராஜேந்திரன், கோவில்பட்டி நகராட்சி பொறியாளர் திரு.கோவிந்தராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.முருகவேல், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.அனிதா, கோவில்பட்டி மெடிக்கல் சூப்பிரண்டு மரு.கமலவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு.வெள்ளைச்சாமிராஜ், உதவி செயற்பொறியாளர் மின்பணி திரு.ராமலிங்கம், உதவி பொறியாளர்கள் திரு.பரமசிவம், திரு.வித்யாசாகர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


கருத்துகள்