முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளின் மேம்பாட்டு பணிகள் : பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் நேரில் ஆய்வு

 

தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.

----------------------------

   தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.07.2021) நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். 

                                                                                      திருச்செந்தூர் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள்                                                                                                                                                                                 



      திருச்செந்தூர்   பேருந்து நிலையம் விரிவுபடுத்தி புதுப்பிக்கும் பணிகளுக்கு திட்டமிடுதல் தொடர்பாக பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து திருச்செந்தூர் பேருராட்சியில் ரூ.11 கோடி மதிப்பிட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் வெளியேறுவதை நேரில் பார்வையிட்டனர்.                


                                                                                                          மேலும் ரூ.3.59 கோடி மதிப்பிட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து 83 ஏக்கர் பரப்பளவில் திருச்செந்தூர் பேருராட்சி குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றும் குப்பை கிடங்கில் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டனர்.

     செய்தியாளர்கள் சந்திப்பில்                                                                                                                                                                                   பின்னர் பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருச்செந்தூர் பேருராட்சியில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பார்வையிடப்பட்டது. இன்னும் சில மேம்படுத்தும் பணிகள் செய்ய வேண்டிய உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோருடன் ஆய்வு செய்யப்பட்டது. பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை 285 வீடுகள் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் முழுமையாக அனைத்து வீடுகளும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை மூலம் பெறப்படும் கழிவு நீர் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும். திருச்செந்தூர் பேருந்து நிலையம் நவீனமுறையில் விரிவுப்படுத்த உள்ளது. முதல் தளத்தில் மல்டி லெவல் கார் பாக்கிங் மற்றும் டார்பென்டரி குளிக்கும் வசதியுடன் அமைக்கவும் வசதி செய்ய ஆய்வு செய்யப்பட்டுள்ளது. துறை செயலர் மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் கலந்துகொண்டு இதற்கான திட்ட வரைவுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, பேருராட்சிகளின் இணை இயக்குநர் திரு.மலைமான் திருமுடிக்காரி, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் திரு.மணிமோகன், கண்காணிப்பு பொறியாளர் திரு.குணசேகரன், பேருராட்சிகள் துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.அன்பழகன், பேருராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் திரு.குற்றாலிங்கம், வட்டாட்சியர் திரு.முருகேசன், முக்கிய பிரமுகர்கள் திரு.எ.பி.ரமேஸ், திரு.வால்சுடலை, பேருராட்சிகள் செயற்பொறியாளர் திருமதி.ஜெகதீஸ்வரி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் திரு.செந்தூர்பாண்டியன், திருமதி.லதாஸ்டான்லின், பேருராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.வாசுதேவன், திருச்செந்தூர் செயல் அலுவலர் திரு.ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்