முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ.டி.ஐ-களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




                                  

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் (தூத்துக்குடி திருச்செந்தூர் வேப்பலோடை நாகலாபுரம்) மற்றும்  தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

-----------------------

8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐ.டி.ஐ-களில் சேர www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் ஆகியவை அனைத்தும் இணையதளத்திலுள்ள விளக்கக் கையேட்டில்   (Prospectus)  தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் ஆதார் கார்டு புகைப்படம் மற்றும் சிறப்பு நிலை முன்னுரிமைச் சான்றிதழ்கள்    (Special category Priority Certificate)  இருப்பின் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

 எனவே ஐ.டி.ஐ பயிற்சியில் சேர விரும்பும்; மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்திலுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50ஃ- பற்று அட்டை(Debit card)  /  (Credit card)  ஃ கடன் அடடை  இணைய வழி வங்கிக் கணக்கு  மற்றும்     (Internet Banking)    யை தேர்ந்தெடுத்து அதன்வாயிலாக செலுத்தலாம்.

மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு இ-சேவை மையங்கள்  பார்வையிட்டு இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீட்டின்படி தரவரிசைப்பட்டியல்   (Rank List)  இதே இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதற்கேற்ப ஒதுக்கப்பட்ட தேதிகளில் அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாக சேர்க்கை நடைபெறும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது சரியான அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிட வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் அனைத்தும் குறுந்தகவல்களாக  மட்டுமே அனுபப்பப்படும் என்பதால் இதில் தனிக்கவனம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750ஃ- (வருகை நாட்களுக்கு ஏற்ப)

கட்டணமில்லா பேருந்து சலுகை 

விலையில்லா மிதிவண்டி

விலையில்லா மடிக்கணினி

விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் 

விலையில்லா சீருடை - ஒரு செட்

விலையில்லா காலணி - ஒரு செட்

பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள்


மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்ஃமுதல்வர் அவர்களை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட அட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்