முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

 .


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

--------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.09.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஃ கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கொரோனா டெஸ்ட் சாம்பிள் மாதிரிகள் எடுப்பது மற்றும் வீடு வீடாக பணியாளர்களை கொண்டு கண்காணிப்பது, கொரோனா தடுப்பூசிகளை அதிக மக்களை சந்திக்கும் நபர்களுக்கு போடுதல், மேலும் 3வது அலையை சமாளிக்கும் வகையில் கவனமாக இருத்தல், கொரோனா பாதுகாப்பு மையங்களை தயார் செய்து வைத்தல், தேவையான மருந்து, மாத்திரைகளை தலைமையிடத்தில் இருந்து பெற்று வைத்தல் உள்ளிட்டவைகள் குறித்தும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் தடுப்பணை கட்டும் பணிகள், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் திட்ட பணிகள், பொதுப்பணித்துறையின் மூலம் திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் பணிகள், ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகள், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகள், மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகளில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் மற்றும்தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் தினசரி சாம்பிள் டெஸ்ட் எடுப்பதை தொடர்ந்து 3000 ஆகவே இருக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை குறிப்பாக மக்களை அதிகமாக சந்திக்க உள்ள ஓட்டல் பணியாளர்கள், மார்கெட் ஊழியர்கள், ரேசன் கடையில் பணியாற்றுபவர்கள், பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர், நடத்துனர்கள், போக்குவரத்து காவலர்கள், அதிக மக்கள் வருகை தரும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து போட வேண்டும். 3வது அலையை எதிர்கொள்ள கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நகர்ப்புறத்தில்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எனவே மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி பகுதியில் கொரோனா கள பணியாளர்களை அதிகமாக நியமித்து 2 தினங்களுக்கு ஒருமுறை வீடு வீடாக சென்று காய்ச்சல், கொரோனா அறிகுறிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் லிக்யுடு ஆக்சிஜன் டேங்க் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா சிம்டம்ஸ் உள்ளோருக்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு பெற்று இருப்பில் வைக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு மையங்களை தயாராக வைக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் தடுப்பணை கட்டும் பணிகளை குறித்த காலத்திற்குள் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் யாத்திரை நிவாஸ் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும். தூத்துக்குடி பாதாள சாக்கடை பணிகளை தினசரி ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் 248 குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்ட பணிகளையும் மற்றும் பல்வேறு பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஊரக வளர்ச்சி முகமை ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தங்களது துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை தினசரி ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


முன்னதாக தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் -  - தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழைநார் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார். 

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் திரு.அபிசேக் டோமர், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோபி, இ.கா.ப., தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் மரு.நேரு, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சங்கரநாராயணன் (கோவில்பட்டி), திருமதி.கோகிலா  (திருச்செந்தூர்), முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி, பேருராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் திரு.குற்றாலிங்கம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.முருகவேல், நகராட்சி ஆணையர்கள் திரு.கிருஷ்ணமூர்த்தி (கோவில்பட்டி), திருமதி.சுகந்தி (காயல்பட்டிணம்), சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் மரு.போஸ்கோராஜா (தூத்துக்குடி), மரு.அனிதா(கோவில்பட்டி), மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் திரு.அண்ணாதுரை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்