முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம்


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஊராட்சி பகுதியில் வளர்;ச்சி திட்ட பணிகள் மற்றும் மரம் வளர்ப்பு தொடர்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

-----------------------

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஊராட்சி பகுதியில் வளர்;ச்சி திட்ட பணிகள் மற்றும் மரம் வளர்ப்பு தொடர்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் இன்று (12.07.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாண்புமிகு சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஃ கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை விரைவாக மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை ஏழை, எளிய மக்களுக்கு சரியாக சென்று சேரவில்லை எனவே ஏழை, எளிய மக்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என பல ஊராட்சித்தலைவர்கள் இங்கு தெரிவித்தார்கள். நிச்சயமாக தலைவர் தளபதி அவர்களின் ஆட்சியில் தகுதியான அனைவருக்கும் நிச்சயமாக முதியோர் உதவித்தொகை பெற்று தரப்படும்.  மகளிர் ஊராட்சி தலைவிகள் இக்கூட்டத்திற்கு குறைவாக வந்துள்ளனர். இதுபோன்ற கூட்டங்களுக்கு கண்டிப்பாக அனைவரும் வந்து கலந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற வாய்;புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பல்வேறு ஊராட்சிகளில் பணம் இல்லாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஊராட்சிக்கு தேவையான உதவிகளை செய்வதாக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு நமது பிள்ளைகளை பாதுகாக்க, படிக்க வைக்க, அவர்களின் எதிர்காலத்திற்கு சொத்து சேர்ப்பதை போல நமது சமுதாயத்தை பாதுகாக்க நமது எதிர்கால சந்தியினரின்  நலனை பாதுகாக்க மரம் நடும் திட்டத்தினை அனைவரும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மரங்கள் இல்லையெனில் மழை இல்லை. தேனிக்கள் இல்லையெனில் பூ காய்கள் இல்லை. அதைப்போல நீங்கள் வைக்கும் மரங்கள் உங்களது எதிர்காலத்தை காக்கும். வேப்பமரங்கள் ஊராட்சிக்கு அதிக வருமானம் தரும் மரம் என்பதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் இங்கு அனுபவரீதியாக எடுத்து சொன்னார். வேப்பமரம் இயற்கை விவசாயத்திற்கு பெரும் தேவையான உள்ளது. ரசாயண உரங்கள் மூலம் பாழ்பட்டுள்ள மண்ணை இயற்கை உரங்களின் மூலம் வளப்படுத்த வேண்டும். எனவே ஊராட்சி தலைவர்கள் தங்களது ஊராட்சி பகுதியில் உள்ள இடங்களில் மரங்களை வளர்த்து ஊராட்சியின் வருவாயை பெருக்கிட வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆட்சியில் முழுமையாக செய்து தருவோம் என தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட மரங்களை தனி ஒருவராக இருந்து வளர்த்த திரு.தங்கமாரியப்பன் அவர்களை பாராட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், முக்கிய பிரமுகர் திரு.ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றியக்குழு தலைவர் திரு.ரமேஷ், துணைத்தலைவர் திரு.காசிவிஸ்வநாதன், வட்டாட்சியர் திரு.ரகுபதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். 


.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்