தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி. பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
----------------------------
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு இன்று (24.07.2021) ஆய்வு செய்தார். மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மீளவட்டான் பகுதியில் 132 ஏக்கர் பரப்பளவில் உள்ள சி.வ.குளம் ரூ.11.50 கோடி மதிப்பிட்டில் தூர்வாறி, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தப்படும் பணிகள் மற்றும் வரத்து கால்வாய்கள் காங்கிரிட் கால்வாய்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு பகுதியில் ரூ.7.69 கோடி மதிப்பிட்டில் ஸ்மாட் ரோடு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்கள். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் ரூ.53.40 கோடி மதிப்பிட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் அங்கு 27 வழித்தடங்களில் பேருந்துகள் செல்லும் வசதியுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படுவதையும், தரைத்தளம் முழுவதும் பேருந்து பயணிகளுக்கும், மற்ற 4 தளங்களில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டு வருவதையும், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வெள்ளநீர் வடிகால் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சி.வ.குளம் தூர்வாறப்பட்டு அங்கு வெள்ள நீர் தேக்கும் வகையில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் மழைக்காலங்களில் நகருக்குள் வெள்ளம் வராமல் குளத்தில் தேக்கப்படும். தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இன்னும் 2, 3 மாதங்களில் முழுமையாக முடிக்கப்படும். கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படும் பகுதிகளும் இன்று ஆய்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. ஸ்மாட் சிட்டி பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்காமல் இருந்தது. தற்போது அதனை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மாட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் அருகில் உள்ள போக்குவரத்து கழக இடம் அனுமதி பெறுவதால் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள், தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் திரு.உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஆனந்தசேகரன், திரு.ராமஜெயம், திரு.ஜெகன், திரு.அருணாசலம், மாநகராட்சி பொறியாளர் திரு.சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் திரு.சரவணன், நகர்நல அலுவலர் மரு.வித்யா, வட்டாட்சியர் திரு.ஜஸ்டின் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக