முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக கல்லிரல் அழற்சி தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு Hepatitis – B/C மருத்துவ பரிசோதனை

           

                           


 

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக கல்லிரல் அழற்சி தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு     Hepatitis – B/C மருத்துவ பரிசோதனையை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்

-------------------------

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக கல்லிரல் அழற்சி விழிப்புணர்வு தினம் இன்று (28.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு     Hepatitis – B/C– மருத்துவ பரிசோதனையை துவக்கி வைத்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

உலக கல்லிரல் அழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டு ஜூலை 28ம் தேதி அனுஸ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு பகுதியில் கல்லிரல் அழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் இணைந்து இங்கு விழிப்புணர்வு பணிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள்.                                                                                                                            


தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ர்நியவவைளை –         டீஃஊ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் இப்பரிசோதனை கர்ப்பிணிகளுக்கு மேற்கொள்வது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு ர்ப்பூசி போடும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளது. ர்நியவவைளை வைரஸ் குறித்து இன்னும் பல்வேறு நபர்களுக்கு தெரியாத நிலை உள்ளது. இதில் 5 வகையான வைரஸ்கள் உள்ளது. இது வேறு, வேறு தன்மைகளில் தாக்ககூடியது. தரமற்ற  உணவுகளை உண்பது, சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவது மூலமும் ஒரு சில வைரஸ் தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் தன்மை கொண்டது என பல்வேறு நிலைகளில் உள்ளது. ஒரே ஊசியை பல்வேறு நபர்களுக்கு பயன்படுத்துவதன் மூலமும் தரமற்ற ரத்தம் ஏற்றுவதன் மூலமும் பரவும் வாய்ப்பு உள்ளது. அரசு ரத்த வங்கியில் ரத்தம் 5 வகையான கிருமிகள் உள்ளதா என டெஸ்ட் செய்யப்படுகிறது. இது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தகூடிய நோய் ஆகும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக கல்லிரல் அழற்சி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கும் வகையில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவி தலா ரூ.1 கோடி மதிப்பிட்டில் நிறுவப்பட உள்ளது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இன்னும் ஒரு வார காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 அல்லது 3 வார காலத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மின்தடை ஏற்பட்டாலும் தொடர்ந்து இயங்கும் வகையில் இதற்கென தனியாக ஜெனரேட்டர் வசதி சமூக பொறுப்பு நிதியில் இருந்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மருத்துவமனையில் இந்த ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குழந்தைகள் வார்டு பகுதியில் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் கொரோனா 3வது அலை ஏற்பட்டு குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதையும் சமாளிக்கும் வகையில் முன்னேற்பாடாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிட்டில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவி நிறுவப்பட உள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு, துணை முதல்வர் மரு.கலைவாணி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் திரு.மாரியப்பன், மருத்துவ துணை கண்காணிப்பாளர் மரு.குமரன், பேறுகால துறை தலைவர் மரு.முத்துபிரபா, கல்;லிரல் துறை தலைவர் மரு.செல்வசேகர், உள்தங்கும் மருத்துவ அலுவலர் மரு.சைலேஸ் மற்றும்;  மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்