முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி : மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் துவக்கி வைத்தார்.

---------------------------

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்க நிகழ்ச்சி இன்று (05.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் கலந்துகொண்டு, ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கூறியதன் அடிப்படையில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் பயிற்சியினை தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதி சுய உதவிக்குழுவில் உள்ள மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நாபர்டு வங்கியானது ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை நடத்துவதற்கு சிப்போ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும்.  ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியானது ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை 15 நாட்கள் மேல ஆத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 30 பெண்கள் கலந்துகொண்டு பயனடைய இருக்கின்றார்கள்.                                                                                                                                                                                                     


 தூத்துக்குடி மாவட்டத்தில்தான் முதன்முறையாக ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் அஸ்சாம் மாநிலத்தில் இத்திட்டம் உள்ளது.  இந்த பயிற்சியானது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த பயிற்சி மூலம் ஆகாய தாமரையை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதனை விற்றுக்கொடுப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை ஆகும். மதிப்பு கூட்டப்பட்ட பொருளை நல்ல விலைக்கு விற்று உங்களுக்கு வருமானம் பெறுவதற்கான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  ஆகாய தாமரையின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதன் மூலம் தெற்கு ஆத்தூரில் ஆகாய தாமரை இல்லாத குளமாக மாறும். இதன் மூலம் மகளிர்கள் தங்களது வருமானத்தை பெருக்கி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.         

நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் திரு.பிச்சை, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் திருமதி.சிவகாமி, சிப்போ நிறுவனத்தின் பொது மேலாளர் திரு.பழனிவேல், தூத்துக்குடி நாபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு.சுரேஷ்ராமலிங்கம், திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகேசன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முதன்மை வங்கி மேலாளர் திரு.துரைராஜ், ஸ்டேட் பேங்க் முதன்மை மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், கனரா பேங்க உதவி பொது மேலாளர் திரு.சின.எஸ்.தேவ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி துணை பொது மேலாளர் திரு.மணிமாறன், தமிழக அரசு புத்தாக்க பயிற்சி திட்டம் திட்ட அலுவலர் திருமதி.முத்தமிழ்செல்வி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்