கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளுக்கும் மேலும் சுற்றுலா துறையின் மூலம் ரூ.1 கோடி கோவில்பட்டி வட்டம் கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வெட்டுவாண் கோவில் முதல்;;;;;;;;;;;;; உச்சி பிள்ளையார் கோவில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட ஆகிய பணிகளுக்கு மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
--------------------
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளுக்கும் மேலும் சுற்றுலா துறையின் மூலம் ரூ.1 கோடி கோவில்பட்டி வட்டம் கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வெட்டுவாண் கோவில் முதல்;;;;;;;;;;;;; உச்சி பிள்ளையார் கோவில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.கண்ணபிரான் அவர்கள் தலைமையில் (09.08.2021). அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்கள்
மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பேஸ்புக், முகநூல் பக்கத்தில் மாற்றுத்திறனாளியின் தாய் எனது மகனுக்கு வயது 15 ஆகிறது. தற்பொழுது எனக்கு வயது முதிர்ந்த காரணத்தினால் என்னால் அவனை தூக்கி செல்ல இயலவில்லை. எனவே எனது மகன் அவனது அன்றாட நிகழ்வில் பயணிப்பதற்கு 3 சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தார்கள். அதன் அடிப்படையில் கோரிக்கையினை ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 3 சக்கர வண்டியினை அவனே இயக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தினம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதன் மூலம் சுமார் 1054 குடியிருப்புகளுக்கு பயன் பெறுவார்கள். மேலும் சுற்றுலா துறையின் மூலம் ரூ.1 கோடி கோவில்பட்டி வட்டம் கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீகழுகாசலம் மூர்த்தி திருக்கோவில், வெட்டுவாண் கோவில் முதல்;;;;;;;;;;;;; உச்சி பிள்ளையார் கோவில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் வெட்டுவாண் கோவில் முதல் உச்சி பிள்ளையார் கோவில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் ரூ50 லட்சம், பெரிய அளவிலான ஒளிரும் பெயர் பலகைகள் 3 எண்ணிக்கை ரூ.19 லட்சம், சிறிய அளவிலான ஒளிரும் பெயர் பலகைகள் 2 எண்ணிக்கை ரூ.11 லட்சம், கிரி பிரகார மேல ரதவீதி பேருந்து நிலையம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், ஸ்ரீகழுகாசல மூர்த்தி திருக்கோவில் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதுபோல பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அடிப்படை வசதியான குடிநீர் வசதி, வீட்டுமனை பட்டா, பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுதல், குடும்ப அட்டை பல்வேறு நலத்திட்ட உதவிகள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 11000 மனுக்கள் பெறப்பட்டு அதில் 72 சதவிதத்திற்கு மனுக்கள் மீது பசுமைவீடு, இலவச பட்டா, முதியோர் உதவி, விதவை உதவிப்பணம், சாலை வசதி, இஸ்திரி பெட்டி, தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மக்களை தேடி மருத்துவம் என்ற பொன்னான திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அத்திட்டத்தில் முதியோர்கள் நமது மாவட்டத்தில் 25000 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். கொரோனாவில் தாய், தந்தையரை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம்; நிதியதவி செய்கிறது. 17 வயதில் அந்த பிள்ளைகள் எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் மாதம் ரூ.3000 படிப்பு செலவிற்கு கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வளர்ச்சி பணியில் எடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்கி தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்வார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து கயத்தாறு பேரூராட்சி அருகில் மரக்கன்று நடும் திட்டத்தின்கீழ் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.சீனிவாசன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் திரு.குற்றாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.பானு, பேரூராட்சி செயல் அலுவலர்கள் திரு.முருகன் (கழுகுமலை), திரு.சுப்பிரமணியன் (கயத்தாறு), செயற்பொறியாளர் பேரூராட்சிகள் திருமதி.ஜெகதீஸ்வரி, உதவி செயற்பொறியாளர் பேரூராட்சிகள் திரு.வாசுதேவன், வட்டாட்சியர்கள் திரு.பேச்சிமுத்து (கயத்தாறு), திருமதி.அமுதா (கோவில்பட்டி), பஞ்சாயத்து தலைவர் திருமதி.கலைசெல்வி, காமநாயக்கன்பட்டி பங்குதந்தை திரு.அந்தோணிகுரூஸ் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக