முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகாகவி பாரதியாரின் பிறந்த நாள்

 


தூத்துக்குடி மாவட்டம் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு தொழில் துறை, தமிழ் ஆட்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.  

------------------------

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு தொழில் துறை, தமிழ் ஆட்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்கள் ஆகியோர் இன்று (11.12.2021)மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது:


இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கவிதைப் போட்டிகள் என்று அறிவித்ததும் சுமார் 2000 குழந்தைகள் பங்கேற்றார்கள். பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.  


பாரதி பிறந்த மண்ணிலே இந்நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி  அளிக்கிறது. அனைவருக்கும் பொருந்தும் வகையில் கவிதைகள் தந்தவர் மகாகவி பாரதியார் அவர்கள். அனைத்து திசைகளுக்கும் செல்லுங்கள். மற்ற நாடுகுளில் உள்ள கலைச் செல்வங்களை மீட்டு கொண்டு வந்து சேருங்கள், தமிழ் மொழியை, தமிழ் வாழ்வை வளப்படுத்துங்கள் என்று பாரதியார் கவிதை வழியாக நமக்கு செய்திகளைச் சொன்னார்கள். 


தன் வாழ்நாள் முழுவதும் இங்கு இருக்கக்கூடிய மாணவ - மாணவிகளுக்கு தான் குறிப்பாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கனவு மெய்பட வேண்டும் என்று அவர் முக்கியமாக கருத்தை சொல்லியுள்ளார். உங்களுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கும். இங்கே மேடைக்கு வந்த ஒரு குழந்தை சொன்னது அடுத்த தூத்துக்குடி கலெக்டர் நான்தான் என்று அப்படிச் சொல்லக்கூடிய கனவோடு அந்த உறுதியோடு இங்குள்ள ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்பட வேண்டும். அத்தகைய கனவுகளை நீங்கள் எதற்காகவும் விட்டுவிடக்கூடாது. பாரதி பெருமையாகக் சொன்னது எமக்குத் தொழில் கவிதை வேறு யாரும் இவ்வாறாக சொல்லியது இல்லை. மற்றவர்கள் என்ன வேலை பார்க்கிறார்களோ அதைச் சொல்வார்கள். எனக்குத் தொழில் கவிதை என்று பெருமையோடு சொன்னவர் பாரதி. 


இறுதி வரை அந்தக் கவிதை அவருக்கு ஒரு பெரிய பொருளை கொண்டு வந்து சேர்க்கவில்லை. பெரிய அதிகாரத்தை கொண்டு வந்து சேர்க்கவில்லை. இப்படி ஒரு கவிஞர் வாழ்ந்ததை நம்பமுடியவில்லை. இத்தனை தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அந்த பெருமைகளை  பேசிக்கொண்டு இருக்கிறோம். 


எனவே இங்குள்ள மாணவர்கள் நாம் பாரதி எண்ணத்தினை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். தனக்கு என்று ஒரு கொள்கை, கனவு இருக்கிறது என்ற உறுதியோடு வாழ வேண்டும். பல சாதனைகளை செய்ய வேண்டும் என்றார்.


மாண்புமிகு தொழில் துறை, தமிழ் ஆட்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பேசியதாவது:


மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இம்மாவட்டம் விடுதலை வீரர்களை உருவாக்கிய பூமியாக திகழ்கிறது. இது வானம் பாத்த பூமிதான் ஆனால் மானம் காத்த பூமி என்பதையும் மறந்துவிடக்கூடாது. ஆயுதம் செய்வோம், ஆலைகள் அமைப்போம், கல்வி சாலைகள் வைப்போம், ஒரு காலத்தில் கல்விசாலைகளை திறப்பதை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் செய்தார்கள். தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆலைகள் வைக்கும் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தோன்றின் புகழுடன் தோன்றுக என்ற வார்த்தைக்கு ஏற்றார் போல் வாழ்ந்த மனிதர் மகாகவி பாரதி அவர்கள். மகாத்மா காந்தி அவர்கள் மறைவிற்கு பின் எழுதினார்கள். நமக்கு பின்னால் வாழ்பவர்கள் இப்படி ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை நம்ப தயங்குவார்கள். அதேபோல் இப்படி ஒரு கவிஞர் நம்முடன் வாழ்ந்தார். சுதந்திரத்தைப் பற்றி பேசினார். மக்களிடையே விடுதலை உணர்வுகளை ஊட்டினார் என்று வாழ்ந்தவர் மகாகவி பாரதி. அப்படி இருந்தால் நாம் அவரை பற்றி நாம் பேசுறிறோம். அவர் ஊட்டிய அந்த உணர்வு இருக்கின்ற காரணத்தால்தான் இங்கு   சின்னஞ்சிறு குழந்தைகள் அவர் உருவத்தில் அமர்ந்திருக்கின்ற போது அவர் உணர்வு நமக்கு தெரிகிறது. நாம் தற்பொழுது அவர்தம் ஒவ்வொரு கவிதையிலும், கட்டுரையிலும் அந்த உணர்வு இடம் பெற்றிருக்கும். எழுத்து என்பது ஜீவிதமாய் இருக்கக்கூடிய ஒன்று இன்று குழந்தைகளின் கவிதைகளை பார்க்கும் போது பாரதிக்கு இருந்த கோபம் பாரதிக்கு இருந்த வேகம் இத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் இன்னும் நம்மிடையே சமுதாயத்தில், நம்முடைய குழந்தைகள் இடத்திலே இருக்கிறது. ஒரு குழந்தை எழுதுகிறது.  காக்கை குருவிகள் எங்கள் சாதி காட்டுமிராண்டிகள் வேண்டாம் சாமி. ஒரு குழந்தை, ஓடி விளையாடலாம் என்று அப்பாவிடம் கேட்டேன். பாரதி அப்பாடல்களில் ஆண்ட்ராய்டு போன்களில் மூழ்கிவிட்டார் பாரதி, அம்மாவிடம் கேட்டேன் பாரதி அம்மா டி.வி. சீரியல்களில் சிக்கிவிட்டார் பாரதி என்று எழுதுவதாக ஒரு கவிதை எழுதியுள்ளார்கள்.  ஒரு குழந்தை நம்மிடத்தில் கேட்கின்றபோது சமூகம் எங்கே இருக்கிறது. வீட்டின் வரபேற்பரையில் இவற்றை காண முடிகிறது. எனவே பாரதி ஊட்டி விட்ட சமூக சீர்திருத்தங்களை கொண்டுவர குழந்தைகள் இடத்தில் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 


நிகழ்ச்சியில் திரு.நக்கீரன் கோபால் அவர்கள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், எட்டயபுரம் வட்டாட்சியர் திரு.ராதாகிருஷ்ணன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கணேசன், தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் திரு.உமரிசங்கர், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி.கஸ்தூரிசுப்புராஜ், முக்கிய பிரமுகர் திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஜீவன், திரு.ராமஜெயம், திரு.ராமமூர்த்தி, திரு.நவநீதன், திரு.பாரதிகணேசன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்