முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம்




 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் 

---------------------------

 தூத்துக்கு மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பயிற்சி முகாம் கையேட்டினை வெளிட்டார்கள்.





 மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாட்டில் 5 மாவட்டத்தில் உள்ள உற்பத்தி பொருட்களை சந்தை மதிப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக புதிய சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பேக்கேஜிங் உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு பயிற்சி வகுப்பு இன்று துவக்கி வைக்கப்படுகிறது


. நமது தூத்துக்குடி மாவட்டத்தில்தான்முதல் பயிற்சி வகுப்பு கோவில்பட்டியில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோவில்பட்டி மற்ற மாவட்டத்திற்கு முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. கோவில்பட்டி கடலைமிட்டாயை விரும்பி வாங்குவார்கள். கோவில்பட்டியில் தொழில் முனைவோர்கள் அதிகமாக உள்ளனர். கோவில்பட்டி கடலைமிட்டாக்கு புவிசார் குறியீடு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளது.


 இந்த புவிசார் குறியீடு மூலம் சர்வதேச அளவில் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மார்க்கெட்டிங் பெருமளவில் கிடைக்கும். கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் நீண்ட காலத்துக்கு நல்ல தரத்துடன் அதிக ஏற்றுமதி திறனை கொண்டுள்ளது. எந்த ஒரு உணவு பொருளும் வாடிக்கையாளரை சென்றடையும் வரை அதன் தரம் சுவை மாறாமல் உள்ளபடியே பெறுவதற்கு பேக்கேஜிங் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் தரப்படும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.


 இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாரயணன், இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பேக்கேஜிங் சென்னை மண்டல துணை இயக்குநர் திரு.பொன்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி.சொர்ணலதா, எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர் திருமதி.ஜெரினா பப்பி, வட்டாட்சியர் திருமதி.அமுதா, கடலை மிட்டாய் தாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் நல சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்