முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா





04.12.2021 தூத்துக்குடி தருவை மைதான உள் விளையாட்டு அரங்கத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

. ----------------------

 தூத்துக்குடி தருவை மைதான உள் விளையாட்டு அரங்கத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா 2021 மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (04.12.2021)    அன்று  நடைபெற்றது.


 இந்நிகழ்ச்சியில் 204 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 




மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளும், சிறப்பாக பணியாற்றிய மாற்றுத்திறனாளி அலுவலத்தை சார்;ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:


 தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 03 அன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாம் ஒவ்வொரு நாளையும் மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடும் விதமாக இருக்க வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அழகாக உடையணிந்து, ஆர்வமாகவும் இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 


நமது மாவட்டத்தில் சுமார் 95 சதவித மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை 100 சதவிதமாக உயர்த்த வேண்டும். நமது மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.





 அதனடிப்படையில் இன்றைய தினம் 63 பயனாளிகளுக்கு ரூ.48.20 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 80 பயனாளிகளுக்கு ரூ.3.36 லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 8 பயனாளிகளுக்கு சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான பேட்ரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, 5 பயனாளிகளுக்கு ரூ.5.80 லட்சம் மதிப்பிலான முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் செயற்கை அவயம், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50000 வங்கி கடன் மானியம், 11 பயனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை;கான ஆணையினையும், 35 பயனாளிகளுக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பிலான ரெடிங்டன் பவுண்டேசன் சென்னை சார்பாக நல்லயான்காது கேளாதோருக்கான மாணவ, மாணவியருக்கு கற்றல் கல்வி உபகரணம் (வுயடிடநவ) என மொத்தம் 204 பயனாளிகளுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.








மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசிற்கு கொண்டு செல்வதற்கு மாற்றுத்திறனாளிகளின் அனைத்து சங்கங்களும் உறுதுணையாக உள்ளது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்றுவது எளிமையாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 


இன்றைய தினம் இந்த உள் விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளால் அமைக்கப்பட்ட அரங்கில் கைவினைப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து துறையினரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என தெரிவித்தார். 


 நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சிவசங்கரன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு, இணை இயக்குநர் மருத்துவம் மரு.முருகவேல், சமூக நலத்துறை அலுவலர் திருமதி.தனலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் (தூத்துக்குடி) திரு.விநாயகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பேட்ரிக் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்