தூத்துக்குடியிலிருந்து. இயக்கப்படும். பேருந்துகளின் இயக்க நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு

 




தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு நாளை 20.04.2021 முதல் அமுல்படுத்தப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது. 

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி ஃ தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும். 


தூத்துக்குடியிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

  இவை தவிர தொலைதூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என்ற விபரம் திருநெல்வேலி அரசுபோக்குவரத்துக் கழக பொது மேலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்