முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம்


தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்                         -------                                                       தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.05.2021) நடைபெற்றது. இம்முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இம்முகாமை துவக்கி வைத்து மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவில் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கவே கொரோனா தடுப்பூசி போடுதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது நமது மாவட்டத்தில் குறைந்த அளவே உள்ளது. இதை போக்கும் வகையில் தடுப்பூசி மையங்கள் மட்டுமின்றி மொபைல் டீம்கள் மூலம் கிராமப்பகுதிகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள 1845 கிராமங்களிலும் முகாம் நடத்தும் வகையில் 36 குழுக்கள் மூலம் அவர்களின் வாழ்விட பகுதிக்கே சென்று தடுப்பூசி போடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இம்முகாம்களில் கலந்துகொண்டு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முகாம் நடத்துவது குறித்து ஆட்டோ மூலம் முன்றைய தினமே விளம்பரம் மேற்கொள்ளப்படும். அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.  இம்முகாம்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் மற்றும் அரசியல் அமைப்பை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடுப்பூசி போடுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்களுக்கு உணரச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோராஜா, தூத்துக்குடி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.வாசுமதிஅம்பாசங்கர், துணைத்தலைவர் திரு.சரவணக்குமார், முக்கிய பிரமுகர்கள் திரு.எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.ராமஜெயம், திரு.இளையராஜா மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...