முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி

 




தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களிடம் மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவித்தொகை தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் இன்று (16.05.2021) வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாறு 1 பகுதியை சேர்ந்த திரு.வனமல்லுசாமி என்பவரின் மகன் ரமேஷ் (வயது 30) என்பவர் 13.5.2021 அன்றும், வைப்பாறு 1 கோட்டைமேடு ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த கோட்டைப்பாண்டி (வயது 55) என்பவர் 13.5.2021 அன்று மழையின்போது இடி மின்னல்  தாக்கி உயிரிழந்தனர். இவர்களின் வீடுகளுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த ரமேஷ் என்பவரின் தந்தை திரு.வனமல்லுசாமி, தாயார் திருமதி.ஜக்கம்மாள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பேரிடர் மேலாண்மை நிதி உதவித்தொகை தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து உயிரிழந்த கோட்டைப்பாண்டி என்பவரின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி திருமதி.சாந்தி மற்றும் கர்ப்பிணி மகளிடம் ஆறுதல் தெரிவித்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்கள். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்கள் கலந்துகொண்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து கயத்தாறு வட்டம் முடுக்கலாங்குளத்தை சேர்ந்த அழகுமுருகராஜ் (வயது 24) என்பவர் 11.5.2021 அன்று மழையின்போது இடி மின்னல்  தாக்கி உயிரிழந்தார். கயத்தாறு வட்டம் கலைப்பைபட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவர் 09.5.2021 அன்று மழையின்போது இடி மின்னல்  தாக்கி உயிரிழந்தார். இவர்களின் வீடுகளுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த முருகராஜ் என்பவரின் தந்தை திரு.ஜெயச்சந்திரன், தாயார் திருமதி.பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பேரிடர் மேலாண்மை நிதி உதவித்தொகை தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து உயிரிழந்த மாரிமுத்து என்பவரின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி திருமதி.முருகலட்சுமி மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், வட்டாட்சியர்கள் திரு.பேச்சிமுத்து (கயத்தாறு), திரு.ரகு(விளாத்திகுளம்), முக்கிய பிரமுகர்கள் திரு.ஜெகன் பெரியசாமி, திரு.சின்னப்பாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...