முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீட்டின் மேற்கூரையில் உட்புறம் பெயர்ந்து விழுந்ததில்; ஒரு பெண் உயிரிழப்பு - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் விசாரனை

 .   




      தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் உட்புறம் கான்கீரீட் சிமெண்ட் பூச்சு நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பெரிய அளவில் பெயர்ந்து விழுந்ததில்; ஒரு பெண் உயிரிழப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை.                                                               


                                                                                   தூத்துக்குடி வடபாகம் எல்லைக்கு உட்பட்ட .   கிரு ஷ்ணராஜபுரம் 7வது தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டு உள்ளது. அதில் ஒரு வீட்டில் நடராஜன் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இன்னொரு வீட்டில் ராஜமுருகன் என்பவர் தனது குடும்பத்துடன் 5 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார், இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், பரமேஸ்வரி (22) என்ற மகளும், சுந்தர் (21) என்ற மகனும் உள்ளனர்.                                                    

ராஜமுருகன் குடியிருந்து வரும் வீட்டின் மேற்கூரை உட்புறம்  4 வருடங்களுக்கு முன்பு சேதமடைந்துள்ளது, அதை வீட்டின் உரிமையாளரான நடராஜன், கொத்தனார் மூலம் சிமெண்ட் வைத்து பூசி சீர் செய்திருக்கிறார். மேற்படி சிமெண்ட் பூச்சானது நேற்று நள்ளிரவில் ராஜமுருகன் குடும்பத்தார் நான்கு பேரும் தூங்கிக் கொண்டிருந்தபோது பெரிய அளவில் பெயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜமுருகன் மகள் பரமேஸ்வரி மற்றும மகன் சுந்தர் மீது விழுந்தது, அதில் படுகாயமடைந்த இருவரையும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், செல்லும் வழியில் பரமேஸ்வரி உயிரிழந்தார். படுகாயமடைந்த சுந்தருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

                                                                சம்பவம்றிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உடனடியாக நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.  மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார். 

இது குறித்து வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள் வழக்குப்பதிவு செய்து, அவரது தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுந்தர் சிங், தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. நாகராஜன், இரவு ரோந்து போலீசார் உட்பட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...