முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை


ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் காவல் துறை காளிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை.


இன்று தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார். 


இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்று வழி தடுப்பூசிதான், இந்த நேரத்தில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம், தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கொரோனா தொற்று வருவதில்லை, அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட  உயிரிழப்பு ஏற்படுவதில்லை.  தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் அனைவரும் தடுப்பூசி போட்;டுக்கொள்ள வேண்டும். பணிக்கு செல்லும்போது  முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், 2 முககவசங்கள் அணிந்து கொள்வது சிறந்தது,  அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும,; மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தவும். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது குளித்துவிட வேண்டும் ஏனென்றால் உங்கள் மூலம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றும், இவற்றை சில காலங்கள் நாம் கடைபிடித்தால் தான் கொரோனா வைரஸை வெல்ல முடியும் என்றும், மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், முக்கியமாக ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தவிர்க்க வேண்டும் ஆன்லைனில் பணத்தை இழந்து சில காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வது நடந்து வருகிறது இதனால் ஆன்லைன் ரம்மி  விளையாட வேண்டாம், தயவு செய்து நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள், புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார். 


 இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு  காவல்துறை கூடுதல்  கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. செந்தாமரைகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர். 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...