முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை

 

                                                                தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் இல்லம் தேடி 465 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

-------------------------------


கோவிட் - 19 இரண்டாவது அலை பெருந்தொற்றிலிருந்து, பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு 24.05.2021 முதல் தளர்வில்லாத பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதன்படி பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய தேவைகளில் காய்கறிகள், பழங்கள் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரைகளின்படி, தோட்டக்கலைத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனைத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வேளாண்மை துறையின் மூலம் 339 வாகனங்களிலும், தோட்டக்கலை துறையின் மூலம் 1178 வாகனங்களிலும், வேளாண்மை விற்பனைத் துறையின் மூலம் 161 வாகனங்களிலும், ஆக மொத்தம் 1678 வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இல்லம் தேடி 465 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள்; விற்பனை செய்யப்பட்டது. 

நேற்றைய தினம் 268 வாகனங்களில் 63 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. வட்டார அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு மட்டுமின்றி விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும், அண்டை மாநிலத்திற்கு எடுத்துச் செல்லவும் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட வாழைப்பழங்கள் சுமார் 1800 மெட்ரிக் டன் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0461 - 2340888 தொடர்பு கொள்ளவும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...