கொரோனா தொடர்பான தகவல்களை அறிய இணையதள சேவை துவக்கம்

 




தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும்,  stopcoronatuti.in  இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் இணையதள சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கிவைத்தார். 

--------------------------

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும்            stopcoronatuti.in  இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் இணையதள சேவை துவக்க நிகழ்ச்சி  இன்று (08.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள்  கலந்துகொண்டு இணையதள சேவையை துவக்கிவைத்து தெரிவித்ததாவது:-


இணையதள சேவையில் பொதுமக்கள்    stopcoronatuti.in  இணையதளத்தில் தினசரி எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை விபரங்கள், கொரோனா தொற்று விபரங்கள் குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் விபரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம். மேலும் தடுப்பூசி மருந்துகள் இருப்பு விபரங்கள், தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விபரங்கள், காய்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்தும், பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வார் ரூம் தொடர்பு எண்களும்,உதவி மையங்களின் தொடர்பு எண்களும், இலவச தொலைபேசி எண்களும் இச் சேவையில் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலக மருத்துவர் டாக்டர்.சோமசுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்