முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கால்நடைகளுக்கு காப்பிடு செய்து, பயன் பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

 



தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளுக்கு  தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தகவல் 


தமிழக அரசின் கால்நடை காப்பீடு திட்டமானது கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை இறப்பதினால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து பாதுகாக்கவும,; கால்நடை காப்பீட்டின் நன்மைகளை விளக்கும் பொருட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021ஆம் ஆண்டிற்கான தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின் கீழ் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஒரு வருடம் அல்லது முன்று வருடங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு பசு, ஒரு எருமை, பத்து எண்ணிக்கை கொண்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வைத்து இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஒரு நபர் ஐந்து கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ளலாம். கறவைப்பசு, எருமை இவ்வினங்கள் 2-1ஃ2 வயது முதல் 8 வயதிற்குள் இருக்க வேண்டும.; வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் 1 முதல் 3 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கால்நடைகளுக்குரிய காப்பீடு பிரிமியத்தில் 50மூ மானியத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். கால்நடைகள் வளர்ப்போர் கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட அருகாமையில்; உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் ஆய்வு செய்து சான்று வழங்கிய பின் அதன் அடிப்படையில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும.; காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளுக்கு காதுவில்லைகள் பொருத்தப்படும் 

காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறப்பு ஏற்பட்டால் காதுவில்லையும், கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து வழங்கப்படும் கால்நடைகளின் இறப்புச் சான்றினையும,; காதுவில்லையும் புகைப்படமும் இணைத்து காப்பீடு நிறுவனத்தில் அளித்தால் தங்கள் கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகாமையில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...