முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு உரம் தயாரிக்கும் எந்திர கட்டிட திறப்பு



தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிடத்தினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.

----------------

தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிட திறப்பு  நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு  திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிடத்தினை திறந்து வைத்தார். மேலும் குப்பைகளை எடுத்து வர பயன்படுத்தப்படும் மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வாகன பணிகளை துவக்கி வைத்தார்.                                        


                     

                                                                                                                                              இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஃ கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதியில் ரூ.20.82 லட்சத்திற்கு செட், உரம் தயாரிக்கும் எந்திரம் ரூ.39.92 லட்சம், கழிப்பிட வசதி ரூ.2.96 லட்சம், குடிநீர் வசதி ரூ.1.58 லட்சம், எலக்ட்ரிகல் இன்சினிரேட்டர் ரூ.3.75 லட்சம், பிளாஸ்டிக் சாரிடர் ரூ.1.38 லட்சம், சுற்றுச்சுவர் ரூ.3.30 லட்சம், பல்வேறு கிராம ஊராட்சிகளில் இருந்து குப்பைகளை கொண்டு வர மின்சாரத்தால் இயங்கும் குப்பை கொண்டு வரும் மூன்று சக்கர வாகனம் ரூ.11 லட்சம், தோட்ட கருவிகள் 0.26 லட்சம் என மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி விமான நிலையம், குமாரகிரி ஊராட்சி, முடிவைத்தானேந்தல் ஊராட்சி, கட்டாலங்குளம் ஊராட்சி, சேர்வைகாரன்மடம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் தினசரி சேரும் சுமார் 6 டன் கழிவுகள் இங்கு பிரிக்கப்பட்டு மக்கும் கழிவுகள் எந்திரத்தின் மூலம் உரமாக மாற்றப்பட்ட உள்ளது. 

இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர் திரு.ஜெகன் பெரியசாமி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.சங்கரஜோதி, தூத்துக்குடி ஒன்றியக்குழு தலைவர் திரு.வசுபதிஅம்பாசங்கர், உதவி செயற்பொறியாளர் திரு.அமலா ஜெசி ஜாக்குலின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.வசந்தா, திரு.சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.நர்மதாருபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...