முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் பட்டினம்மருதூர் கடற்கரையில் சர்வதேச அளவில் கடல் சாகச போட்டிகள்

 


தூத்துக்குடி மாவட்டம் பட்டினம்மருதூர்  கடற்கரையில் சர்வதேச அளவில் கடல் சாகச போட்டிகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - சுற்றுலா,   பண்பாடு   மற்றும் அறநிலையங்கள்   துறை   அரசின்   முதன்மைச்   செயலாளர்   டாக்டர்.பி.சந்திரமோகன்,   இ.ஆ.ப., அவர்கள் தகவல்

--------------------------

தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் வட்டம் பட்டினம்மருதூர்  கடற்கரையில் நடைபெற்ற கடல் சாகச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா,   பண்பாடு   மற்றும் அறநிலையங்கள்   துறை   அரசின்   முதன்மைச்   செயலாளர்   டாக்டர்.பி.சந்திரமோகன்,   இ.ஆ.ப., அவர்கள் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்,



தமிழ்நாடு     அரசு     சுற்றுலாத்துறையின்     சார்பாக     கடல்     சாகச     விளையாட்டுகள் செயல்படுத்துவது   தொடர்பாக   தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மற்றும் தூத்துக்குடி வ.உ.சி.  துறைமுக  பொறுப்புக்கழக,  முதன்மைப்  பொறியாளர்,  போக்குவரத்து  மேலாளர்,  துணை கண்காணிப்பாளர்   மற்றும்   அதிகாரிகள்   ஆகியோர்களுடன்   வ.உ.சி.   துறைமுக   பொறுப்புக்கழக விருந்தினர்   மாளிகையில்   ஆலோசனை   மேற்கொள்ளப்பட்டது.    



  அதனைத்தொடர்ந்து,   வ.உ.சி.   துறைமுக பொறுப்புக்கழக பூங்கா கடற்கரைப் பகுதி  மற்றும், தூத்துக்குடி  மாநகராட்சி  ரோச் பூங்கா பகுதியில் கடல் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தூத்துக்குடி,   பட்டினம்மருதூர்   அருகில்   அமைந்துள்ள   கடற்கரையில் 

Kite    boarding championship   2022”    என்ற   நிகழ்ச்சி   15-02-2022   முதல்   18-02-2022   வரை   நடைபெற்றது. இப்போட்டிகள் வேப்பலோடை அர்ஜூன் மேத்தா அவுட்பேக் நிறுவனம் சார்பாக கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடல் சாகச விளையாட்டு போட்டிகளில்.  முவைந  ளுரசகiபெ யனெ முலயமiபெ      Aqua Out Backமுதலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள்  Kite Surfing and Kyaking  , Aqua Out Back.   யாட்சிங்  அசோசியேஷன்,  பார்  செய்லிங்,  பிரிமியர்  கைட்  போர்டிங்  அசோசியேஷன்  ஆகிய அமைப்புகள்  மூலம் நடத்தப்பட்டது.    இப்போட்டிகளில்  இந்தியாவின்  பல்வேறு  பகுதிகளிலிருந்து வருகைபுரிந்த  கடல்  சாகச  விளையாட்டு  வீரர்கள்  கலந்து  கொண்டனர்.   இப்போட்டிகளில்  வெற்றி பெற்ற  விளையாட்டு  வீரர்களுக்கு    பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சாகச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவான கடற்கரைகள் உள்ளன. இவ்விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற்றவர்களுக்கு தன்னார்வலர்களாகவும், பயிற்றுனர்களாகவும் இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுவதோடு அவர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


 மேலும் தேசிய அளவில் நடைபெற்று வரும் இக்கடல்சார் சாகச நிகழ்ச்சியினை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக சர்வதேச அளவில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


நிகழ்ச்சியில், தமிழ்நாடு  சுற்றுலா வளர்ச்சிக்   கழக   மதுரை   மண்டல   மேலாளர்   திரு.டேவிட்   பிரபாகர், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.க.சீனிவாசன்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  திரு.சு.ஜெகவீரபாண்டியன்,  வேப்பலோடை அர்ஜூன் மேத்தா அவுட்பேக் நிறுவனம் உரிமையாளர் திரு. அர்ஜூன் மேத்தா, உதவி  செய்தி  மக்கள்  தொடர்பு  அலுவலர் (செய்தி) திருமதி.செல்வலெட் சுஷ்மா,  உதவி   சுற்றுலா   அலுவலர் திரு.ஹ.கோவிந்தராஜ்  மற்றும்  தமிழ்நாடு  சுற்றுலா  வளர்ச்சிக்  கழக  உதவி  பொறியாளர்   உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்