முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உக்ரைன் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இமநாதபுரம் மாவட்ட மருத்துவ கல்லூரி மாணவனுக்கு தூத்துக்குடி விமானநிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்பு

 


உக்ரைன் நாட்டிலிருந்து இராமநாதபும் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை                                மாண்புமிகு  சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள்,              மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்                     ஆகியோர் வரவேற்றார்கள்

-----------------------

தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்தில், உக்ரைன் நாட்டிலிருந்து, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் , ஆகியார் இன்று (13.03.2022) வரவேற்றார்கள். 

இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். தற்போது, அங்கு ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் மாணவர்களை இந்தியா அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள். குறிப்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழக மாணவர்களை அழைத்து வருவதற்கான முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என அறிவித்ததோடு, மாணவர்களை அழைத்து வரும் பணியினை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து உக்ரைன் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற பரமக்குடி நகராட்சி பகுதியை சார்ந்த திரு.கண்ணன், திருமதி.அம்பிகாபதி ஆகியோரின் மகன் செல்வன்.சந்தோஷ் கண்ணன் என்பவர் உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவரை தமிழக அரசு சார்பில் சென்னை – தூத்துக்குடி வான் வழியாக அழைத்துவரப்பட்டு, தரைவழியாக இராமநாதபுரத்திற்கு வழியனுப்பிவைக்க உரிய நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மருத்துவ மாணவன் சந்தோஷ் கண்ணனை, சென்னை விமான நிலையத்தில் வரவேற்றதோடு தூத்துக்குடிக்கு வழியனுப்பி வைத்தார்கள். சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட மாணவனை, தூத்துக்குடி விமான நிலையத்தில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன், அவர்கள், மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் , ஆகியார் இன்று வரவேற்றார்கள்.

இது குறித்து மாணவன் சந்தோஷ் கண்ணன் தெரிவித்த்தாவது- 

நான், உக்ரைன் நாட்டில் ருபிசினி, லுகான்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். தற்போது, அங்கு ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழக மாணவர்களை அரசின் சொந்த செலவில் அழைத்து வருவது மிகவும் பெருமைக்குறியது. மேலும்,என் போன்ற மாணவ, மாணவியர்கள் போர் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, தமிழக அரசு இது போன்ற உதவிகளை வழங்கி எங்களை, எங்களது சொந்த ஊருக்கு அழைத்து வந்தற்கு என் சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் மாணவ, மாணவியர்கள் சார்பாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவாகளுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.  

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்