நவின முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள்

 


திருநெல்வேலி மாவட்ட பனைபொருட்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

---------------------------

திருநெல்வேலி மாவட்ட பனைபொருட்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்  (04.05.2022) அன்று வழங்கினார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டுறவு நிறுவனமாகும். இதில் 95 ஆரம்ப பனை வெல்ல கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 46 பனைவெல்ல கூட்டுறவுசங்கங்கள் உள்ளது. அதில் 14304 தனிநபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 சம்மேளனத்தால் ஆண்டு ஒன்றிற்கு மூன்று கோடியே அறுபத்து ஒன்பது லட்சம் வணிகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசும், மாநில அரசும் பொருள் சம்பந்தமாக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் வங்கி மூலமாக கடன் வழங்குவதற்கு மத்திய அரசும் மாநில அரசும் அந்த பொருளை தன் மூலமாக மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்களை நிறைய தொழில்களை உருவாக்க கூறியுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்துக்கு விளக்கு, திருவண்ணாமலைக்கு கைவினைபொருட்கள், தூத்துக்குடி மாவட்டத்திற்கு பனை பொருட்களை சொல்லியுள்ளார்கள். இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 50 கைவினைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு 11 வகையான பனை தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப் படுகிறது. நீங்கள் இதை பயன்படுத்திக்கொண்டு வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். 



மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரிக்கு பட்டறிவு பயணம் செய்து நவீன இயந்திரங்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரித்தல் தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

  மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருட்கள் பயிற்சி நிறுவனம் சென்னை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளம் மற்றும் கோயம்பத்தூர் தொழில் நுட்ப நிறுவனம் கீழக்கரை கல்லூரி முனைவர்கள் பேராசிரியர்கள் ஆகியோர் மூலமும் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியை முடித்த பின் பயிற்சி பெற்றவர்களுக்கு பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் பாரம்பரிய பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் பொருளாதாரம் மேம்படவும் வழிவகை ஏற்படுத்தப்படுகிறது. இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அருகிலுள்ள ஆரம்ப பனை வெல்லம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் மாவட்ட மற்றும் மாநில சம்மேளனங்களின் நேரடி விற்பனை நிலையங்களான திருச்செந்தூர், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, முருகன் குறிச்சி, வள்ளியூர் மற்றும் நெல்லை சந்திப்பு ரயில் நிலைய விற்பனை கிளைகள் மூலமும் காதிகிராப்ட, சர்வோதயா மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் நியாய விலைக்கடைகள் மூலமாகவும் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இப்பயிற்சி மூலம் பனைத் தொழில் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு இருப்பதற்கும். தமிழர்கள் வாழ்க்கையை தெரிந்துகொள்ள இந்த பனைமரங்கள் உள்ளன. இந்த பனைமரத்தை நம்பி விவசாயம் செய்யுங்கள். தமிழர்கள் தொழில் பனைமரம்தான். திருச்செந்தூர், வேம்பாரில் பனைமரங்கள் உள்ளன. வரும் நிதியாண்டில் பனை மரங்கள் அரசு நிலங்களில் அதிகமாக நடவு செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் பனை மரத்தில் ஏறுவதற்கு கருவி உள்ளது. ஏற்கனவே கோயம்புத்தூரில் தென்னை மரத்தில் ஏறுவதற்கு கருவி உள்ளதை பார்த்து செய்துள்ளார்கள். இது ஈசியான கருவியாக உள்ளது. பனைமரத்தை வெட்டாமல் இருப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பனைபொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. சுய உதவிக்குழுவினர் மாவட்டத்திற்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும். பனை பொருட்கள் தயாரிப்பதற்கு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக இருக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.புஹாரி, கதர் கிராம தொழில்கள் மதுரை மண்டல துணை இயக்குநர் திரு.அருணாச்சலம்,  தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் மேலாண்மை இயக்குநர் திரு.கண்ணன், வேளாண்மை துணை இயக்குநர் திரு.சுந்தரராஜன், திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் மேலாண்மை இயக்குநர் திரு.பாலசுப்பிரமணியன், கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் பேராசிரியர் திரு.ரவீந்திரன், காயல்பட்டிணம் நகர்மன்ற தலைவர் திரு.முத்து முகமது, திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகேசன், பனை பாதுகாப்பு இயக்க தலைவர் திரு.கென்னடி,  பனை சம்மேளன இயக்குநர் திரு.ராயப்பன், சங்க பிரதிநிதிகள், கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்