முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி


: 16.05.2022

தூத்துக்குடி மாவட்டம் கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்பினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  தொடங்கி வைத்தார்


-------------------------


தூத்துக்குடி மாவட்டம் கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம் மீன் பதன தொழில்நுட்பத்துறை மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கயல் கலையரங்கில்  நடைபெற்றது

கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்பினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்துபேசியதாவது:


கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம் மீன்பதன தொழில்நுட்பத்துறை சார்பில் கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி துவக்க விழா நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் பல்கலைக்கழகத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் என்னுடைய முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடியை பொருத்தவரை எந்த இளைஞர்களிடமும் உங்களுடைய கனவு என்ன என்றால் நான் ஒரு தொழில் முனைவோராக வேண்டும். மற்றவர்களுக்கு தாங்கள் வேலைவாய்ப்பு கொடுப்பவர்களாக திகழ வேண்டும் என்பார்கள். 


தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1990ல் இருந்து 2018 வரை 122 மடங்கு கடலுணவு வியாபாரம் மற்றும் சந்தை என்பது விரிவாக இருக்கிறது. இருந்தபோதும் உலகச் சந்தையில் தமிழகம் 4.8 சதவீதம் மட்டுமே அடைந்துள்ளது. பொருளாதார வாய்ப்புள்ள இந்த சந்தையில் தமிழக மக்கள் அதிக அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கடல் உணவுப் பொருட்களில் புதிய மதிப்புக்கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். ஆனால்  இவ்வளவு பெரிய கடற்கரை இருக்கக்கூடிய தமிழகத்தில் கடல் உணவுகளை சந்தைப்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம் மீன்பதன தொழில்நுட்பத்துறை சார்பில் கடல் உணவுகளை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மீன்களின் வகைகள் அவற்றை எவ்வாறு கையாள்வது மற்றும் அதனை பதப்படுத்தி பொதிதல் (Pயஉமiபெ) செய்வது குறித்து பயிற்சி இன்று முதல் 18ம் தேதி வரை நடைபெகிறது. இப்பயிற்சி வகுப்பில் பங்கு பெறும் மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் இப்பயிற்சியில் அளிக்கப்படும் பயிற்சிகளை மிக கவனமாக பயின்று இதன் வாயிலாக சுய தொழில் தொடங்குவதற்கு தங்களை தயார்டுத்திக்கொள்ள வேண்டும். மேலும் தாங்கள் தயாரிக்கும் கடல்சார் உணவுப்பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்த கடல்சார் உணவு பொருள் வணிக மையம் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய திட்ட இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் புதிய தொழில் முனைவோருக்கான கடன் உதவி பெற்று புதிய தொழில் முனைவோர்களாக வருவதற்கு என்னுடைய வாழ்;த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன்பெரியசாமி,  டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர். சுகுமார் (நாகப்பட்டினம்), இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி பொது மேலாளர் திரு.ரவீந்திரன், மீன் வளம் கல்லூர்p மற்றும் ஆராய்ச்சிநிலையம் முதல்வர் (பொ) திரு.சாந்தகுமார், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவசுப்பிரமணியன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி.சொர்ணலதா, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பயனாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்