முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

44வது சர்வதேச சதுரங்க போட்டி : தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த துவக்க விழா ஜோதி


  

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் வரவேற்றார்கள்.

--------------------------

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (26.07.2022) வரவேற்று பேசியதாவது:  

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதற்கு காரணமான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். சதுரங்க விளையாட்டு போட்டி நடத்துவதற்கு மிகத் துல்லியமாக திட்டங்கள் தீட்டி குறுகிய காலத்தில் மிக பிரமாண்டமான அளவில் முன்னேற்பாடு பணிகளை செய்து நாளை துவக்க விழா நடைபெறுகிறது. சதுரங்க விளையாட்டு துவக்க விழா ஜோதியானது இன்று காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துவக்க விழா ஜோதி வருகை தராத மாவட்டங்களுக்கு இதுபோன்ற ஜோதியினை அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த ஜோதியானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் வாயிலாக சென்னைக்கு எடுத்து செல்லப்படுகிறது. எடுத்து செல்லப்படும் ஜோதியினை மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் ஏற்றி வைக்கிறார்கள். 187 நாடுகளில் இருந்து வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள். அதுபோல நமது மாவட்டத்தில் இருந்து 50 பேர் பார்வையாளர்களாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். பல்வேறு போட்டிகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட வேம்பார் அரசு மேல்;நிலைப்பள்ளி, ஆறுமுகநேரி உயர்நிலைப்பள்ளியில் இருந்து கணித ஆசிரியை, நாலாட்டின்புதூர் உயர்நிலைப்பள்ளியில் இருந்து பயிற்சியாளர்களாக பங்கேற்கிறார்கள். மாணவர்கள் சதுரங்கம் விளையாடுவதினால் ஞாபக சக்தி, திட்டமிடுதல், கூரிய சிந்தனை, பொறுமை உருவாகும். எனவே மாணவர்கள் சதுரங்கம் விளையாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என               மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக இன்று காலை விளாத்திகுளத்திற்கு வருகை தந்த ஜோதியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்திற்கு வருகை தந்த ஜோதியினை வட்டாட்சியர், பேரூராட்சி தலைவர்கள், மாணவ, மாணவிகள் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜோதியினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜிசரவணன்,  கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான் ஆகியோர் முன்னிலையில் அலுவலர்கள், பணியாளர்கள் வரவேற்றனர்.


 அதனைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரத்திற்கு வருகை தந்த ஜோதியினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல் ஆகிய பகுதிகளுக்கு வருகை தந்த ஜோதியினை வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கா.மகாலட்சுமி, கோவில்பட்டி வட்டாட்சியர் திருமதி.ஷீலா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு.கருணாநிதி, மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் திரு.ரத்தினராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்கு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...