மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள், சங்க தூத்துக்குடி கிளை சார்பாக வ.உ..சி அவர்களின் சிலைக்கு மரியாதை
சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல்
வ .உ. சிதம்பரனார் அவர்களின் 151 வது பிறந்தநாளான 5-9-2022 திங்கள்கிழமையான இன்று நாடு முழுவதுவும் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு , மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள், சங்க தூத்துக்குடி கிளை சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி பழைய கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க அமைப்பு செயலாளர் திரு சி ஆனந்தன் , ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கீதா மாரியப்பன் , மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார் அவர்கள் , தமிழ்நாடு நகராட்சி , மாநகராட்சி ஓய்வூதியர்கள் தூத்துக்குடி கிளை சங்க தலைவர் இரா.மாடசாமி ஆகியோர் வ.உ..சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க துணைத் தலைவர் நேரு, செயலாளர் B.ஜெயசீலன் , இணைச் செயலாளர் M. ராஜ் துணைச் செயலாளர் சண்முகவேல் , பொருளாளர் தனசிங் , மற்றும் தங்கச்சாமி , தமிழரசன் , மற்றும் ஊடக - விளம்பரச் செயலாளர்
இ. சிவகாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக