பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையில் தீ




தூத்துக்குடியில் சிவன் கோயில் அருகே பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையில்    ஏற்பட்ட   தீவிபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்



தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயில் அருகே உள்ள மில்லர்  புரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக பூஜை பொருள் மற்றும் கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.  நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. 

   

 இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த பூஜை பொருட்கள் மற்றும் கொழு பொம்மைகள் உட்பட ரூபாய் .2லட்சம் மதிப்புள்ள பாெருட்கள் எரிந்து சேதம் ஆனது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது 

இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறா

கருத்துகள்