தேசிய அளவிலான வூசூ போட்டிக்கு. தூத்துக்குடி திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு




 தேசிய அளவிலான வூசூ  போட்டிக்கு தூத்துக்குடி  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு. கடந்த மாதம் 27 , 28 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வூசூ  போட்டியில்  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கலந்து கொண்டனர்.


 நாற்பத்தி ஐந்து கிலோ எடை பிரிவில் மாணவர்கள் அருண்குமார் தங்கப்பதக்கமும் , 52 கிலோ எடைப்பிரிவில் மாணவர் முத்துவேல் தங்கப்பதக்கமும், இருபத்தி எட்டு கிலோ எடைப்பிரிவில் மாணவர் அசோக்குமார் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். தங்கம் மற்றும் வெள்ளி வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.  



வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி அண்டனி சாரால் ரோஸ் அவர்களும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கருப்பசாமி மற்றும் பயிற்சியாளர்கள் சாலமோன், சுடலை கண் ஆகியோர் கலந்து கொண்டனர் . பள்ளியின் தாளாளர் அவர்களும் மற்ற ஆசிரியப் பெரு மக்களும் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சியாளர் களையும் பாராட்டி கௌரவித்தனர். 


விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை பயிற்சியாளர் சாய் இன்டர்நேஷனல் அகாடமி நிறுவனர் முத்து சங்கர் குமார்  செய்திருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்