முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் ஆறாவது தேசிய சித்த மருத்துவ தினம்

 ஒவ்வொரு வருடமும் அகத்தியர் பிறந்த தினமான மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

அதனை முன்னிட்டு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பாக , தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் சித்த மருத்துவ பிரிவின் சார்பாக ஆறாவது தேசிய சித்த மருத்துவ தினம்  2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அன்று தூத்துக்குடி காந்தி நகர் இந்து  அரிஜன துவக்க பள்ளியில் கொண்டாடப்பட்டது.  

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக தலைவர் திரு ராமசாமி, பள்ளி செயலாளர் திரு M.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் C.K. கே ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திருமதி R.ராஜ செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது, 

இந்த நிகழ்ச்சியில் தொடக்கமாக  தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளி குழந்தைகள் பாட,   குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட தலைமை  சித்த மருத்துவ அலுவலர்  திருமதி R.ராஜ செல்வி அவர்கள் தனது சிறப்புரையில் மாணவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வுக்கான நெறிமுறைகளை எடுத்துக் கூறினார், 

மருத்துவர் M. லதா அவர்கள் மாணவர்களுக்கு சிறு தானிய உணவுகள் மற்றும் அதன் பயன்களை பற்றியும் யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கினார

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இந்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முளைகட்டிய தானியங்கள் மற்றும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டது

பள்ளியின் செயலாளர் திரு M.வெற்றிவேல் , சித்தா உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்  M.லதா,  உதவி மருத்துவ அலுவலர் ஹோமியோபதி டாக்டர் திரு லட்சுமி காந்த்   மற்றும்  திரு கருப்பசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்  .





பின்னர் மாணவர்களுக்கு வினா விடை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பதில் அளித்த மாணவ  மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் எஸ் லட்சுமிகாந்த் மற்றும் மருந்தாளர்கள் சுப்புலட்சுமி , சுமித்திரா  சாந்தி, காமாட்சி ,செவிலியர்கள் கிருஷ்ணவேணி ,ஜெயஸ்ரீ மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் R. சுப்பிரமணியன் V. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி L.A.மாலதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்