முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி விழா

 

 

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி விழா

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் இந்து அரிசன துவக்கப்பள்ளி பழமையான பள்ளிக்கூடம் என்பது மட்டுமல்ல வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளிக்கூடம் ஆகும்

இந்தப் பள்ளியானது தூய்மை செய்யும் தொழிலாளர்களின் சமூகத்தைச் சார்ந்தவர்களால் தமிழ்நாட்டிலேயே நடத்தப்பட்டு வரும் ஒரே ஒரு அரசு தொடக்கப்பள்ளி இதுவே ஆகும்

இந்த காந்திநகர் பகுதியில் குடியிருந்து வந்த அருந்ததியர் மக்களும், மீனவ மக்களும், தங்களது பிள்ளைகளுக்காக ஆரம்பக் கல்விக்காக தொடக்கப்பள்ளி பள்ளியை  ஓலை குடிசையில்  ஓர் ஆசிரியர் பள்ளியாக 1957-இல் தொடங்கப்பட்டது

பின்னர் 1956 ல் அப்பகுதி மக்களின் குடியிருப்பிற்கு பட்டா பெறவும் அருந்ததியர் நல சேவா சங்கம் ஆரம்பித்த காலத்தில் இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா பெறவும் இப்பள்ளியை விரிவாக்கம் செய்ய அப்போதைய கல்வியாளரும் சட்டமன்ற உறுப்பினர் திரு APC. வீரபாகு B.A அவர்களும் மற்றும் திரு P.PM.T பொன்னுச்சாமி நாடார், அவர்களின் பெரும் முயற்சியாலும் இப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா 1957இல் வழங்கப்பட்டதுடன் ஓலை குடிசை பள்ளியை ஓட்டு கட்டிடமாக மாற்றி , பத்து ஆசிரியர்கள் பணிபுரிய 350 மாணவ, மாணவியர்கள் தொடக்கக் கல்வியினை பயின்றனர்

இப்பள்ளியை 1958 இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கல்விக்கண் கொடுத்த பெருந்தலைவர் கு காமராஜ்  அவர்களும் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சருமான திரு P. கக்கன் அவர்களும் இப்பள்ளியை பார்வையிட்டு பதிவேட்டில் பதிவு செய்து 1962இல்  இப்பள்ளிக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடத்த நிரந்தர அங்கீகாரம் அவர்களால் வழங்கப்பட்டது என்பது வரலாற்று சிறப்பாகும்

இத்தகைய பெருமை வாய்ந்த பள்ளியில் தான் கடந்த 15 -7- 2023 சனி கிழமை  அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை , "கல்வி வளர்ச்சி விழா"வாக தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் இந்து அரிசன துவக்க பள்ளியில் வெகு சிறப்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது





இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க ... பள்ளியின் தலைவர் திரு T. ராமசாமி அவர்கள் தலைமையில் திரு S. ராஜ் திரு C.ஜெயபால் திரு K. முருகன் திரு C. சண்முகவேல் M. சந்திவீரன் திரு ஜோ. வேல்சாமி , திரு Sமதுரைவீரன் ஆகியோர் முன்னிலையில் திரு.C.K.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் , பின்னர் இப்பள்ளியின் செயலாளர் திரு M. வெற்றிவேல் அவர்கள் துவக்க உரையாற்றினார் 

திரு K. பாலசுந்தர் அவர்களால் மாணவ மாணவியர்களுக்கு சீருடையும், உயர்திரு அன்புராஜ் அவர்களால் உணவு வழங்கப்பட்டது, மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜ் பற்றி மாணவர்கள் பாடல்களையும், தமிழிலும் ஆங்கிலத்திலும் காமராஜர் அவர்கள் பற்றி உரையை மேடையில் முழங்கினார்கள்



 முன்னதாக.. நிகழ்ச்சியின் சிகரமாக திரு. கோவிந்தராஜ்  I A.S  ( ஓய்வு ) அவர்கள் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்  திரு காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து , மரியாதை செலுத்தினார்

இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் - வாழ்த்துரை வழங்க வந்த சிறப்பு அழைப்பாளர்கள்  - ஆசிரியைகள் - மாணவ - மாணவியர்கள்  கல்வி கண் திறந்த காமராஜ் அவர்களுக்கு மரியாதை செலுத்திய பின்னர் ...  சிறப்பு விருந்தினர்திரு கோவிந்தராஜ்  I A.S          ( ஓய்வு ) அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு  இனிப்பு வழங்கி நிகழ்ச்சியில் பேருரை ஆற்றினார்கள்

அவர் தனது உரையில் கல்வியின்  முக்கியத்துவத்தையும், மாணவ மாணவியர்கள் தங்களது திறமைகளை வளர்ப்பதில் முழு கவனம் செலுத்துவதை பற்றியும் , ஒழுக்கம், உண்மை, உழைப்பு இதை பேணிகாத்து , நாம் மேன்மை பெறுவதற்கான வழிகளை பின்பற்றி நடப்பதே நமது குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்

பள்ளி நிர்வாகம் சார்பில் திரு. கோவிந்தராஜ்  I A.S  ( ஓய்வு )  அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது - நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்த_ பள்ளி நிர்வகம்  , மற்றும் மாணவ - மாணவியர்களின், திறமைகளை , வெளிபடுத்தும் விதமாக பள்ளி மாணவ - மாணவியர்களை ஆசிரியர்கள் தயார் செய்தது பராட்டிற்குரியது

நிகழ்ச்சியில்   பள்ளி தலைமை ஆசிரியை  திருமதி S. மாலதி அவர்கள் நன்றியுரை ஆற்ற தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது











கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்