நாசரேத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
நாசரேத்தில் 13 வது மாநில அளவிலான கராத்தே போட்டி கடந்த 28-10-2023 சனிகிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, போன்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டிகளில் இரண்டு வகையாக நடைபெற்றது கட்டா மற்றும் குமட்டி என்ற பிரிவில் நடைபெற்றது.
இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்க துணைத் தலைவர் திரு. விவின் அவர்கள் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
ஆலன் திலக் கராத்தே பள்ளி தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் கராத்தே டென்னிசன் போட்டி ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கராத்தே மாஸ்டர் அந்தோணி, சிலுவை ரஞ்சித்,அருண் காளி ராஜ், சபரி ,குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக