முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதநேயத்தின் மற்றொறு மறுவுறுவம் மறைந்தது

 திரை உலகிலும், அரசியலிலும்,  புரட்சி கலைஞர் என்றும் , கேப்டன் என்றும் , கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் ரசிகர்களாளும் , மக்களாளும் பிரியமாக அழைக்கப்பட்டவர் தான் நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள்

  விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, உலக தமிழ்  வாழ்  நெஞ்சங்களிலும் , மனிதநேய கொண்டோர் மனதிலும், சாமானிய மக்கள் இதயத்திலும் நீங்கா சோகத்தை தந்துள்ளது

திரைத்துறையில் சாமானியனாக .. போராடி  பிரவேசித்து  மெல்ல... மெல்ல பட வாய்புகளை பெற்று , பெற்ற வாய்புகளில் தவறாமல் தனது திறமைகளை வெளிபடுத்தினார்.

 தனக்கென ஒரு பாணியை உருவாக்கி... வாய்ப்புகள் தன்னை தேடி வரும் நிலைக்கு உயர்ந்தார். தான் உயர்ந்த போது தன்னோடு நடித்த சக நடிகர்களையும் தொழில் நுட்ப கலைஞர்களையும்  கை கொடுத்து உயர்த்தினார் என்பது விஜயகாந்த் அவர்களின் தனி சிறப்பு.

பிறர் பசியை போக்குவதிலும் ... பிறர் தேவை அறிந்து மனித நேயத்தோடு உதவுவதிலும்  அவர் இன்னொறு எம்.ஜி.ஆர் ஆக வாழ்ந்ததால் ... அவரை கருப்பு எம்.ஜி.ஆர்  என அனைவராலும் கருதப்பட்டார் என்பது உண்மை

கலை உலகிலும் .  அரசியல் துறையிலும்   தமிழ் பற்றுமிகுதியால்  தான் நேசத்தோடு ரசித்த  "புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் " அவர்கள் மீதும்  "கலைஞர் கருனாநிதி "அவர்கள் மீதும் நன்மதிப்பும் மரியதையும் கொண்டதால் திரைத் துறையில் விஜயகாந்த் அவர்களை "புரட்சி கலைஞர்" என அழைப்பதாக சொல்வதுண்டு

   திறமையுள்ள புதிய இளைஞர்களுக்கு திரைதுறையில்  வாய்புகளை உருவாக்கி கொடுத்து..  திரை வானில் அவர்களையும் மின்ன வைத்து ரசித்தவர்தான்  கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

காலத்தின்  மாற்றம் ,  அரசியலில் பிரவேசிக்கும் கட்டாயம் ஏற்பட்டு தனது ரசிகர் மன்றங்களை அனைத்தையும் ஒருங்கினைத்து "தேசிய முற்போக்கு திராவிட கழகம்  " என்ற அரசியல் கட்சி தொடங்கினார். தேர்தல் வந்த போது அயராத தனது பிரச்சாரத்தினாலும், இடி முழக்கமாய் அமைந்த பேச்சு பாமரமக்களை சிந்திக்க வைத்தது  

அதுவே விஜயகாந்த் அவர்களுக்கு வாக்குகளாய் பெற்றுதந்.து  வெற்றி முரசு ஒலிக்க செய்தது . 

விஜயகாந்த்  அவர்கள் தமிழக அரசியலில்  ஏழை எளியவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர்..  அடுத்து  வருங்காலம் அவர் கையில் என  அவரது ரசிகர்களும் அவரது கட்சி தொண்டர்களும்  நினைத்த காலம்

 அப்போதுதான்  விஜயகாந்த் அவர்களுக்கு பல்வேறு நெறுக்கடிகள், சோதனைகள், பல் வேறு கோணத்தில் வந்தது, அந்த நிலையிலும் மன "தில்" தைரியத்தோடு எந்த வித ஆர்பாட்டமின்றி  எதிர் கொண்டார் என்பது அவரின் தனி சிறப்பு

விதி அவரை விடவில்லை   அவருக்கு  உடல் நல குறைவு ஏற்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் டிசம்பர் 28,2023 அன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார் 

விஜயகாந்த் அவர்களின் மறைவு அனைவருக்கும்  தாளாத  துயரத்தையும், மன வேதனையை தருகிறது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

விஜயகாந்த் மறைவுக்கு 

"நமது எழுத்தாணி" ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறது

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்