பத்து நாட்கள் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப் படாததால்... லெவஞ்சிபுரம் பகுதி மக்கள் சிரமம்

பத்து நாட்கள் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப் படாததால்... லெவஞ்சிபுரம் பகுதி மக்கள் சிரமம்
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால்மக்கள் மிகவும் சிரமத் திற்கு  உள்ளாகியுள்ளனர்  

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதாள சாக்கடைப் பணிகள் நிறுத்தி வைக்க்பபட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அடிப்படைத் தேவையான குடிநீர் இன்றி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்கவும், குடிநீர் சீராக விநியோகம் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்