முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு


       


                                                                           

 தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் நடைபெறும் போலீசாரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்;.


கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த  24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 07.06.2021 அன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே  சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்டம் தோட்டிலோன்பட்டி சோதனைச் சாவடி, இளையறனேந்தல் சோதனைச் சாவடி மற்றும் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக சென்று அங்கு நடைபெறும் போலீசாரின் வாகன தணிக்கையை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார். 


இந்த ஆய்வின் போது வாகனங்களில் வருபவர்களிடம், அவர்கள் என்ன காரணத்திற்காக எங்கு செல்கின்றனர் என்ற விபரங்களை கேட்டறிந்து தேவையில்லாமல் வெளியே சுற்றுவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 


இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக் கதரிவன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...