முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக திருநங்கைகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு பை வழங்கல்

 

  


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக இன்று  கோவில்பட்டி லட்சுமி திருமண மஹாலில் வைத்து திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். 


ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமி திருமண மஹாலில் வைத்து இன்று (28.05.2021) திருநங்கைகள் மற்றும்  ஏழை எளிய மக்கள் 110  பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். 



அப்போது அவர் பேசுகையில் கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த  24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 07.06.2021 அன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த காலம் மிகவும் சிரமமாக இருக்கும். இதனை பொறுத்துக் கொண்டு விதிமுறைகளை கடைபிடித்தால்தான் கொரோன வைரஸ் என்ற கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நம் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் அரசு நடைமுறைபடுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகி நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றிலிருந்து  நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். 


இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர். 


இதில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக் கதரிவன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ், உதவி ஆய்வாளர் திரு. மாதவராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...