ஸ்டெர்லைட் ஆலையில் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி

 


     ஸ்டெர்லைட் ஆலையில் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி - ஆட்சியர் தகவல்.  

29.05.2021  சளி கிழமை


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்சநீதி மன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணிதுவங்கியது. மாவட்டஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இன்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு 5.70 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிஇ மருத்துவமனைக்கும் 5.76 மெட்ரிக் டன் நாமக்கல் ஸ்ரீலெட்சுமி ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கும் 0.58 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசன் கேஸ் ஏஜென்சீஸ் நிறுவனத்திற்கும்  0.08 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்