முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்களுக்கு. சிலை அமைக்கவும் அவரது நினைவு போற்றும் வகையில் அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்ய இன்று ஆய்வு

 



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

-------------------------------

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.06.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை மற்றும் இடைசெவல் கிராமத்தில்; அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினை போற்றும் வகையிலும், அவருடைய படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவரது புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். 

அதனடிப்படையில், மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் கடந்த வாரம் கோவில்பட்டியில் சிலை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்துள்ளனர். இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கீ.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பஞ்சாயத்து பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் மற்றும் அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கும் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரங்கம் மற்றும் சிலை அமைக்கவும், அவர் படித்த பள்ளியை பழமை மாறாமால் புதுப்பிக்கவும் தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், வட்டாட்சியர் திருமதி.அமுதா, பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.மாரியம்மாள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...