"தமிழன்டா " கலை குழு சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் நிவாரண உதவி

 



தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று புதியம்புத்தூர் கனி மஹாலில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு 08-06-2021  அன்று புதியம்புத்தூர் கனி மஹாலில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வரும் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார். 


இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைக்குழு தலைவர் திரு. ஜெகஜீவன் மற்றும் குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில்தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு, புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்