முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஸ்ரோ நில எடுப்பு கையகப்படுத்தப்படும் பகுதி சேர்ந்தவர்களுக்கு வசதியுடன் கூடிய குடியிருப்பு அமைக்க நில தேர்வுக்கான கள ஆய்வு

 


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில்  இஸ்ரோ நில எடுப்பில்  கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்கு நிலம் தேர்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

----------------

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில்  இஸ்ரோ நில எடுப்பில் கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.06.2021) கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு நிலஎடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  மாதவன்குறிச்சி ஊராட்சி கூடல்நகர் பகுதியை சேர்ந்த 33 குடியிருப்புகள் நில எடுப்பு பகுதிக்குள் வருகிறது. அவர்களுக்கு வீடு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைக்க தாங்கையூர் பகுதியில் இடம் இன்று பார்க்கப்பட்டது. மேலும் பல்வேறு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் பார்வையிடப்பட்டு கூடல்நகர் மக்களின் விருப்பத்திற்கு இணங்க இடம் மாற்றி அவர்களுக்கு வசதியுடன் குடியிருப்பு அமைத்து தரப்படும். இஸ்ரோ நில எடுப்பு பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் நிலம் ஒப்படைப்பு செய்தவுடன் இஸ்ரோ மூலம் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது, இஸ்ரோ நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செல்வராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகவேல், இஸ்ரோ நில எடுப்பு வட்டாட்சியர்கள் திரு.ராஜூ, திருமதி.ரவிகலா, திருமதி.அற்புதமணி, திருமதி.செல்வி, திரு.நாகசுப்பிரமணியன், திருமதி.சிவகாமசுந்தரி, உடன்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.நாகராஜன், திரு.பொற்செழியன், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் திரு.பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...