முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்பட்டியில் தாணியங்கி சிகன்ல் மற்றும் சி.சிடி.வி கேமிரா , : மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துவக்கி வைப்பு







தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய இடங்களில் 10 சிசிடிவி கேமராக்களும், கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை சந்திப்பில் தானியங்கி போக்குவரத்து சிக்னலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கேயே அமைக்கப்பட்டுள்ள தனி அறை மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராவை இன்று (02.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கபசுரக்குடிநீர் வழங்கினார்.  

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில் தானியங்கி கேமரா மற்றும் 10 சிசிடிவி கேமராக்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது, கோவில்பட்டி நகரம் மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்கள் உட்பட அனைத்து பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான பணிகளை தூத்துக்கு மாவட்ட காவல்துறை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.  அதே போல இன்று பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், உடலில்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான சில மூலிகை மருந்துகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.  இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், கைகளை அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், தமிழக அரசு விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

இந்நிகழ்வின் போது கோவில்பட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு. முருகன், கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கலைக் கதிரவன், கோவில்பட்டி கிழக்கு காவல் நியைல ஆய்வாளர் திரு. சுதேசன், கோவில்பட்டி மேற்கு காவல் நியைல ஆய்வாளர் திரு. அய்யப்பன்,  கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...