காவல் நிலைய தலைமை காவலர் தற்கொலை -. பரபரப்பு







தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று விசாரணை.  


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலராக திரு. செல்வமுருகன் என்பவர் கடந்த 14.07.2020 முதல் பணியாற்றி வருகிறார். 

இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. இவரது தந்தை பெயர் கணபதி, இவருக்கு அருணா (42) என்ற மனைவியும், கமலேஷ் (18) மற்றும் அகிலேஷ் வர்ஷன் (8) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த 24.05.1999 அன்று இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த இவர் தற்போது பதவி உயர்வுகள் பெற்று தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டார்மடம், தருவைக்குளம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றி, சிறப்பாக பணியாற்றியமைக்காக உயர் அதிகாரிகளிடம் பல வெகுமதிகள் பெற்று பாராட்டப்பட்டவர். 


இந்நிலையில் இவர் இன்று (01.10.2020) காலை உடன்குடி கூலையன்குன்று பகுதியில் பனங்காட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்