மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டி

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி Mother Fiverose Trust ன் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டிக்கான பரிசளிப்பு விழா,



 நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரெய்லி கண்காட்சி மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளி உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதாஜீவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் K.B பிரம்ம நாயகம், முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ரா. சங்கீதா சின்னராணி, மாநில மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் திரு. மெயகண்டன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் பல மாவட்டகளில் இருந்து பார்வைற்றோர், மாணவ மாணவிகள் Teachers கலந்து கொண்டனர். இதில் IBN AL HAYTHAM BRAILLE வாழ்நாள் சாதனை விருது முனைவர் வே. சுகுமாரன் அவர்களுக்கும் சிறந்த முறையில் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் சமூக ஆர்வலர் DR. S.முகமது இலியாஸ் B. A., அவர்களுக்கு Best Social Service Award  வழங்கப்பட்டது. 

தொடர்ந்து டிரஸ்டி Dr. முகம்மது நஸிர் பிஸியோதெரபிஸ்ட் அவர்கள் பிரெய்லி கண்காட்சி மற்றும் உலக பிரெய்லி தினத்ததை பற்றி சிறப்புரையாற்றினார். டிரஸ்டி ஆர்க்கிடெக்ட் முகம்மது ஹயாஸ் அவர்கள் பார்வைற்றவர்களின் தேவைகளை பற்றியும், அவர்களின் வாழ்வியலை பற்றியும் எடுத்துரைத்தார்.

 தூத்துக்குடியில் பார்வைற்றவர்களுக்கு பள்ளிக்கூடம் இல்லை, வரும் கல்வியாண்டில் தூத்துக்குடியில் பார்வைற்றவர்களுக்கு பள்ளிக்கூடம் கொண்டு வர வேண்டும். என்ற கோரிக்கை டிரஸ்டின் சார்பாக அரசிற்கு வைக்கப்பட்டது, 

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், இலவச வீடு, இவர்களுக்கு கிடைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மதுரை St. Josph பார்வையற்றோர் பள்ளிக்கு Best School விருது கிடைத்தது.

 முதல் பரிசு கோயமுத்தூர் Ramakrishna Mission மாணவி பரணி ஸ்ரீயும் 2ம் பரிசு மதுரை St Joseph School மாணவன் சிவக்குமாரும், மூன்றாம் பரிசு திருச்சி அரசு பார்வையற்றவர் பள்ளி மாணவி வனிதா அவர்களும் நான்காம் பரிசு சேலம் அரசு பார்வையற்றவர் பள்ளி மாணவர் அபினேஷ் குமாரும் வாங்கினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்