இடுகைகள்

பிப்ரவரி 23, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"கலையை அறிவோம்"

படம்
கலைகளையும் கலைஞர்களையும் ஆவணப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வரும்"கலையின் குரல்" அமைப்பின் கலை அறிவோம் நிகழ்வு 06 பாவனை நாடகக் கலையின் அறிமுக பயிற்சி தூத்துக்குடி புரூஸ்லீ தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக வீதி நாடக கலைஞர் கலைச்சுடர்மணி பா.செந்தில்வேல் அவர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயிற்சியாளரைக் குறித்த அறிமுகத்தை கலையின் குரல் அமைப்பின் நிறுவனர் கலைவளர்மணி ப.சக்திவேல் வழங்கினார்.  தொடர்ந்து பாவனை நாடகத்தைப் பற்றிய அறிமுகத்தையும் உடல்மொழி, முகபாவனைகள், நகர்வுகள் மற்றும் கோமாளித்திறன் நடிப்பு போன்ற பயிற்சிகளை மதுரை நடன மற்றும் நாடகப்பள்ளி நிறுவனர் தோழர். மைம் உமேஷ் அவர்கள் வழங்க பங்கேற்பாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.  கலையின் குரல் அமைப்பின் செயல்பாடுகளையும் பயிற்சிகளையும் குறித்து தமிழ்நாடு கலை இலக்கிய  பெருமன்றத்தின் தாளமுத்து நகர் கிளைச் செயலாளர் தோழர் செ.அந்தோணி லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார்.  அடுத்ததாக பயிற்சியாளர் மைம் உமேஷ் அவர்களை வாழ்த்தி நெடுஞ்சாலை கவி...