தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் புதூர்பாண்டியபுரம் செல்வ முத்து விநாயகர் கோவில் 37-ம் ஆண்டு வருஷோபிஷேகம் நடைபெற்றது இந்த விழாவை யொட்டி மாட்டுவண்டி பந்தயம் இரண்டு பிரிவுகளாக . தூத்துக்குடி புதியம்புத்தூர் சாலையில் நடந்தது. இதில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை, தேனி, இராமநாதபுரம் உட்பட பல மாவட்டங் களில் இருந்து பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 24 மாட்டு வண்டிகளும் கலந்து கொண் டன. பந்தயத்தை அயிரவன்பட்டிதொழிலதிபர் முருகேச பாண்டியன், புதூர்பாண்டி யாபுரம் தொழிலதிபர்பொன் முருகன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 15 கி.மீ.தூரம் இலக்கு நிர்ண யிக்கப்பட்ட பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.2 லட்சத்தை சலப்பேரி துக்காம்பிகை மாட்டு வண்டியும், 2-வது பரிசாக ரூ.1.50 லட்சத்தை சிவ கங்கை மாவட்டம் முத்தையாதிருப்பதிமாட்டு வண் டியும், 3-வது பரிசாக ரூ.1 லட்சத்தை நெல்லை மாவட் டம் வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டியும், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரத்தை மதுரை அவனியாபுரம் மோகன் மாட்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !